பாலிவுட் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே ஹாலிவுட்டில் 'xXx: ரிட்டர்ன் ஆஃப் ஸான்டர் கேஜ்' என்ற படத்தில் நடித்தார். 'xXx' பட வரிசையில் மூன்றாம் பாகமாக வெளிவந்த இப் படத்தில் ஆக்ஷன் ராணியாக அவர் கலக்கினார் தீபிகா.
இந்நிலையில், 'xXx' படத்தில் நடித்த நடிகர்களுடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார் தீபிகா. படத்தின் ஹீரோவான வின் டீசெல் அவ்வப்போது தீபிகாவின் புகழ் பாடி வருகிறார். இவரைப் போல் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மற்றொரு நடிகையான ரூபி ரோஸ் தீபிகாவை மிஸ் செய்வதாக உருகியுள்ளார்.
இதுதொடர்பாக இவருக்கும், தீபிகாவும் இடையே நடந்த டுவிட்டர் உரையாடலின்போது, 'நான் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன்' என்று ரூபி கூற, நானும்தான். 'நீங்கள் இந்தியாவுக்கு வாருங்கள். உங்களை கண்டிப்பாக எங்கள் நாடு பிடிக்கும் என நம்புகிறேன்' என்று தீபிகா அதற்கு பதில் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 'xXx' பட வெற்றிக்காக தீபிகா - வின் டீசெல் ஆகியோர் இணைந்து ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இதில் இவர்கள் இருவரிடையே இருக்கும் நெருக்கம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது தீபிகாவை மிஸ் செய்வதாக அவருடன் இணைந்து நடித்த நடிகை உருக்கம் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தற்போது தீபிகாவை மிஸ் செய்வதாக அவருடன் இணைந்து நடித்த நடிகை உருக்கம் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment