Search This Blog

Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts

Friday, October 20, 2017

மெர்சல் முதல் நாள் உலகம் முழுவதுமான பிரமாண்ட வசூல் விபரம்




இந்த ஆண்டின் முதல் நாளில் அதில் வசூல் செய்த படங்கள் பட்டியலில் பாகுபலிக்கு பின் மெர்சல் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.


தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உலகம் முழுவதும் மெர்சல் படம் வெளிவந்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படம் கலவையான விமர்சனங்கள் சந்தித்து வந்த போதும் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டில் வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் மட்டும் பிரமாண்ட படமான ’பாகுபலி-2’க்கு பின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 

மெர்சல் படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ. 31.50 கோடி வசூல் செய்துள்ள.



தவிர, இந்தியாவைத்தவிர மற்ற இடங்களில் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளது. 


ஒட்டு மொத்தமாக முதல் நாளில் மட்டும் தளபதியின் மெர்சல் படம் மொத்தமாக ரூ. 43.50 கோடியை வசூல் செய்துள்ளது.

Thursday, October 19, 2017

மெர்சல் படத்தை குடும்பத்துடன் பார்த்த தல அஜித்!





தேனாண்டாள் தாயரிப்பு நிறுவனம் தயாரித்த 100வது படம் மெர்சல்.  அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ள இப்படம் இயக்குநர் அட்லியுடன் விஜய் கைகோர்க்கும் இரண்டாவது படமாகும். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்திய மேனன், வடிவேலு, கோவை சரளா, சத்தியராஜ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.



படத்தின் தலைப்பு முதல் தணிக்கைக் குழு சான்றிதழ் வரை மெர்சல் பல்வேறு தடைகளைச் சந்தித்த இத்திரைப்படம் நேற்று வெளியானது. உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படத்தை நேற்று அஜீத் தன் குடும்பக்தோடு சென்று பார்த்துள்ளார். இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

Wednesday, October 18, 2017

இணையத்தில் கசிந்த முதல் 16 நிமிட காட்சிகள் – சமூகவலைதளங்களில் அப்லோட் செய்து விஷமிகள் அட்டூழியம்






நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள திரைப்படம் மெர்சல். தீபாவளி திருநாளன இன்று இந்த படம் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யின் 61ஆவது படம், அவர் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் முதல் படம், ‘பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற தெறி’ படத்துக்குப் பின் இயக்குனர் அட்லியுடன் இணைந்திருக்கும் இரண்டாவது படம். ஏ.ஆர்.ரகுமான் இசையில் மூன்றாவது படம் என பல காரணங்களால் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் ‘மெர்சல்’ வெளியாவதற்கு முன்பாகவே பல சாதனைகளைப் படைத்துவிட்டது. படம் எப்படி இருக்கிறது என்பதையும் வெளியான பின் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


இந்நிலையில், படத்தின் முதல் 16 நமிட காட்சிகள் இணையத்தில் திருட்டுதனமாக வெளியிடப்பட்டுள்ளன. இது படக்குழுவினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதலிரவு அறையில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா..




ஹீரோயின்களில் போல்டானவர் என்று ஒருசிலரை சொல்லலாம். அவர்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார் சமந்தா. நாக சைதன்யாவை திருமணம் செய்த கையோடு தனது பெயருடன் ‘அக்கினேனி’ என்ற வார்த்தையை இணைத்திருக்கிறார். இது நாக சைதன்யா வின் குடும்ப பெயராகும்.
முன்னதாக திருமண நெருக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படங் களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த சமந்தா தற்போது மற்றொரு ஷாக் தந்திருக்கிறார்.





Mersal – மெர்சல் – அதிரடி சரவெடி விமர்சனம் – முதல் ஷோ கண்ணோட்டம் சுடச் சுட!




தீபாவளி கொண்டாட்டமாக, நேற்றைய தினம் அமெரிக்க, ஐரோப்பிய, அவுஸ்திரேலிய நாடுகளிலும், இன்றைய தினம் தமிழகம், இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் என ஏனைய நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்திருக்கும் படம் தான் மெர்சல். நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிருக்கும் இந்தப் படத்திற்கு, ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிகழ்கிறது. இனி படம் பற்றிய முதல் நாள் ப்ரீமியர் ஷோ பார்த்த ரசிகர்களின் கண்ணோட்டம், மற்றும் கருத்துக்கள் எப்படி இருக்கின்றது என்று அறிய ஆவலா? கீழே உள்ள காணொளியினைப் பாருங்கள். 










Tuesday, October 3, 2017

இந்தியாவுக்கு வாருங்கள் - 'xXx' பட நடிகைக்கு அழைப்பு விடுத்த தீபிகா

Deepika-Padukone-invites-xXx-costar-to-India


பாலிவுட் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே ஹாலிவுட்டில் 'xXx: ரிட்டர்ன் ஆஃப் ஸான்டர் கேஜ்' என்ற படத்தில் நடித்தார். 'xXx' பட வரிசையில் மூன்றாம் பாகமாக வெளிவந்த இப் படத்தில் ஆக்‌ஷன் ராணியாக அவர் கலக்கினார் தீபிகா. 

இந்நிலையில், 'xXx' படத்தில் நடித்த நடிகர்களுடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார் தீபிகா. படத்தின் ஹீரோவான வின் டீசெல் அவ்வப்போது தீபிகாவின் புகழ் பாடி வருகிறார். இவரைப் போல் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மற்றொரு நடிகையான ரூபி ரோஸ் தீபிகாவை மிஸ் செய்வதாக உருகியுள்ளார்.

இதுதொடர்பாக இவருக்கும், தீபிகாவும் இடையே நடந்த டுவிட்டர் உரையாடலின்போது, 'நான் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன்' என்று ரூபி கூற, நானும்தான். 'நீங்கள் இந்தியாவுக்கு வாருங்கள். உங்களை கண்டிப்பாக எங்கள் நாடு பிடிக்கும் என நம்புகிறேன்' என்று தீபிகா அதற்கு பதில் அளித்துள்ளார்.




கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 'xXx' பட வெற்றிக்காக தீபிகா - வின் டீசெல் ஆகியோர் இணைந்து ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இதில் இவர்கள் இருவரிடையே இருக்கும் நெருக்கம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது தீபிகாவை மிஸ் செய்வதாக அவருடன் இணைந்து நடித்த நடிகை உருக்கம் தெரிவித்துள்ளார்.  

எடை குறைக்கும் முயற்சியால் அனுஷ்கா சோர்வு?

Anushka-become-tired-while-trying-for-weight-loss.


தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா தற்போது பாகமதி என்ற படத்திலும், பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'பாகுபலி 2' சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முன்னிலையில் உள்ளது.

'பாகுபலி 2' படத்துக்கு முன்னதாக 'இஞ்சி இடுப்பழகி' என்ற படத்தில் நடித்தார் அனுஷ்கா. இதில் நடிப்பதற்காக 100 கிலோ வரை எடை கூடி குண்டான தோற்றத்துக்கு மாறினார். கதாபாத்திரத்துக்காக அனுஷ்காவின் இந்த அர்பணிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன.

இந்தப் படத்துக்குப் பின்னர், 'பாகுபலி 2' படத்தில் நடிப்பதற்காக அவர் உடல் எடையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் நினைத்தபடி எடையைக் குறைக்காமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளனார் அனுஷ்கா.

இதையடுத்து 'பாகுபலி 2' படத்தில் அனுஷ்காவை ஸ்லிம்மாக காட்டுவதற்கு என பல கோடிகள் செலவு செய்யப்பட்டது.

இந்நிலையில், எடையை எப்படியாவது குறைத்து பழைய படி ஸ்லிம் தோற்றத்துக்கு மாற டயட், உடற்பயிற்சி, யோகா என அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் இவை எதுவும் கைகொடுக்கவில்லை. இதையடுத்து அமெரிக்கா சென்று உடல் எடை குறைக்கும் தெரிப்பியும் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதன் பலனாக கொஞ்சம் எடை குறைந்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே அனுஷ்காவுக்கு வர வேண்டிய பல வாய்ப்புகள் உடல் எடை காரணமாகவே நழுவி போனது. ஆனாலும் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பான தோற்றத்தை பெறும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் அனுஷ்கா.

இதன் காரணமாக தற்போது அவர் சோர்வுடன் காணப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல தெலுங்கு திரைப்படத்தின் பிரிவியூ ஷோ ஒன்றை பார்க்க அனுஷ்கா வந்திருந்தார். அப்போது அவருடன் சேர்ந்து ரசிகர்கள் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.  இதில் அந்தப் படத்தில் நடித்த ஹீரோயினான மெஹ்ரீன் பிர்ஸாடாவும், அனுஷ்காவோடு சேர்ந்த எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார். 




எடை குறைந்ததாக கூறப்பட்ட அனுஷ்கா, இந்த போட்டோவில் மிகவும் சோர்வாக உள்ளார். இதுமட்டுமில்லாமல் அவர் தோற்றத்தில் பொலிவு இல்லாமல் இருப்பதாகவும், இதன் பின்னணியில் இந்த எடை குறைப்பு சமாச்சாரமே இருப்பதாகவும் திரையுலகினர் பேசி வருகின்றனர்.

‘பக்கத்து வீட்டு கதவை தட்டிய நடிகை ஆண்ட்ரியா




நடிகை ஆண்ட்ரியா நடித்த ‘தரமணி’ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் சித்தார்த் நடிக்கும் மும்மொழி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள பாலிவுட் படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா ஜோடியாக நடிக்கவுள்ளனர். இந்த படம் தமிழில் ‘அவள்’ என்ற பெயரில் உருவாகிறது. மேலும் இதே படம் தெலுங்கிலும் உருவாகவுள்ளது.
மிலிந்த் இயக்கவுள்ள இந்த படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என்று சித்தார்த், ஆண்ட்ரியா இருவருமே தங்கள் டுவிட்டரில் உறுதி செய்துள்ளனர். பக்கத்து வீட்டு கதவை தட்டும் கவர்ச்சியான வேடத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளதாகவும், இந்த படத்தின் மூலம் பாலிவுட்டிலும் ஆண்ட்ரியாவுக்கு மார்க்கெட் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


ஓவியா விஷயத்தில் நான் இதை செய்திருக்கலாம்; ஆரவ் ஓபன் டாக்

aarav-oviya-love



பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சனிக் கிழமையோடு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். மேலும் அவருக்கு ரூ.50 லட்சத்திற்கு காசோலை வழங்கப்பட்டது. இந்த சீசன் முழுவதும்  போட்டியாளர்களுக்காக மக்கள் 76,76,53,065 வாக்குகள் அளித்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியாவிடம் நடந்து கொண்டது பற்றி மனம் திறந்துள்ளார் ஆரவ்.  ஓவியாவால்தான் அவர் பிக்பாஸ் டைட்டிலை வென்றார் என்று சிலர் கூறி வருகிறார்கள். ஓவியாவின் காதலை ஆரவ்  ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட்படி நடக்கும் என்று நினைத்துதான் சென்றேன். ஆனால் அப்படி இல்லை. நாங்களே சமைத்து சாப்பிட்டு, நாங்கள் எடுத்து சென்ற உடைகளைதான் உடுத்தினோம். மேலும் சில நேரங்களில் மட்டுமே பிக்பாஸ் உடை தந்தார். பிக்பாஸ் வீட்டில் எங்கள் பொறுமையை சோதித்தார். டாஸ்க்குகள் மிகவும்  கடினமாக இருந்தன. பிக்பாஸ் வீட்டில் இருந்த பலர் வாக்குகளுக்காக போலியாக நடித்தனர். ஆனால் நானும் அப்படி  வாக்குகளுக்காக மக்களை ஏமாற்ற விரும்பவில்லை.
மக்கள் தன்னை பார்த்து பரிதாபப்பட வேண்டும் என்று சுஜா வருணி நடித்தார். ஓவியா பிரபலமான நடிகை. அதனால் எனக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை அவருக்கு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பிக்பாஸ் வீட்டில் அவர் செய்த சில விஷயங்களால் அவ்வப்போது நாமினேட் செய்யப்பட்டார்.


ஓவியா விஷயத்தில் நான் பொறுமையாக இருந்திருக்கலாம். பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களில் நான்தான் அவரின் நல்ல நண்பர். அவரை அவமதித்திருக்க கூடாது. அவ்வாறு செய்தது தவறு என்றும் கூறியுள்ளார் ஆரவ்.

மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம்: நடிகர் திலீப் ஜாமினில் விடுவிப்பு

நடிகையை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கைதான மலையாள நடிகர் திலீப் 85 நாட்களுக்கு பிறகு இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
கேரள மாநிலத்தில் திரைப்பட நடிகை ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், பல்சர் சுனில் உள்ளிட்ட 6 பேரை கடந்த பிப்ரவரி 17-ம் தேதி போலீசார் கைது செய்தனர்.


இவர்களிடம் நடத்திய விசாரணையில் அடிப்படையில் பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். தன்னை ஜாமினில் விடுவிக்கக்கோரி அவர் தாக்கல் செய்த 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், ஐந்தாவது முறையாக அவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்கி கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திலீப் கைதாகி 85 நாட்கள் ஆகியும் போலீசார் அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததையடுத்து, அவரை ஜாமீனில் விடுவிப்பதாக ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

பிக்பாஸ் டைட்டிலை வென்றால் இதை செய்வேன்; சொன்னதை செய்த ஆரவ்

aarav





பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சனிக் கிழமையோடு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். மேலும் அவருக்கு ரூ.50 லட்சத்திற்கு காசோலை வழங்கப்பட்டது. இந்த சீசன் முழுவதும்  போட்டியாளர்களுக்காக மக்கள் 76,76,53,065 வாக்குகள் அளித்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.



பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு டைட்டிலை ஜெயித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது ஆரவ் கூறியதாவது, பிக்பாஸ் வெற்றியில் கிடைத்த பணத்தை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் தான்  செலவு செய்வேன் என்றார். ஆனால் சொன்னபடி செய்வாரா என்ற கேள்வியும், எதிபார்ப்பும் இருந்தது.



பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. வரி பிடித்தம்  போக ஆரவுக்கு ரூ. 36 லட்சம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சொன்னதுபோல் பரிசு தொகையில் ரூ. 5 லட்சத்தை ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்கு வழங்கி உள்ளார். இதனால் ஆரவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Monday, October 2, 2017

தலைகீழாக நின்றாலும் ஓவியா என்னை திருமணம் செய்ய முடியாது..! ஆரவ் திமிர் பேச்சு…!!

oviya



பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது, நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் தான். ஆனால் மக்களால் இவரது வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதைத்தொடர்ந்து, தற்போது வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் ஆரவ் தனக்காக ஓட்டுபோட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
அதோடு டைட்டிலை அனைவருக்கும் சமர்பிப்பதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.
இவரது ட்விட்டுக்கு ஓவியா ஆர்மியினர் வறுத்தெடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஓவியாவுடன் வேண்டுமானால் படங்களில் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கேன் ஆனால் வாழ்க்கையில் ஒன்று சேர வாய்ப்பில்லை என்று ஆரவ் பத்திரிக்கை ஒன்றிற்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓவியாவும் தற்போது ஆரவ்வை காதல் செய்வது போல் தெரியவில்லை. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்டாக இருந்தால் ஓவியா ஆரவ்வை காதல் செய்யவில்லை என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள். ஆரவ் இவ்வாறு கூறியதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்பு தெரிவித்துவருகிறார்கள்.



Saturday, September 30, 2017

‘மெர்சல்’ விஜய்யின் அப்பா யார்னு தெரியுமா?




‘மெர்சல்’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக வடிவேலு நடித்துள்ளதாக கூறப்படுகிறது.


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் வடிவேலு, சத்யன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், யோகி பாபு என 4 காமெடியன்கள் நடித்துள்ளனர். வழக்கமாக காமெடி வேடத்தில் நடிக்கும் வடிவேலு, இந்தப் படத்தில் குணசித்ர வேடத்தில் நடித்துள்ளாராம். விஜய்க்கு அப்பாவாக அவர் நடித்திருக்கிறார் என்கிறார்கள்.


மேலும், நீண்ட நாட்கள் கழித்து கோவை சரளாவுடன் இணைந்து நடித்திருக்கிறார் வடிவேலு. கோவை சரளா, விஜய்யின் வளர்ப்புத் தாயாக நடித்திருக்கிறார் என்கிறார்கள்.

‘மெர்சல்’ டீஸரை வெளியிட்ட ராஜமெளலி





விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு டீஸரை இன்று வெளியிடுகிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி.

விஜய் நடிப்பில், அட்லீ இயக்கியுள்ள படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீஸர், கடந்த 21ஆம் தேதி ரிலீஸானது.இதன் தெலுங்கு டீஸரை, ‘பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இன்று வெளியிடுகிறார். “மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் 100வது படம் இது. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விஜய் என இரண்டு லெஜண்ட்களின் 25வது வருடம். சிறந்த காம்பினேஷனில் உருவாகியுள்ள சிறந்த படம். நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும்” எனத் தெரிவித்துள்ளார் ராஜமெளலி





அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...