இந்த ஆண்டின் முதல் நாளில் அதில் வசூல் செய்த படங்கள் பட்டியலில் பாகுபலிக்கு பின் மெர்சல் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உலகம் முழுவதும் மெர்சல் படம் வெளிவந்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படம் கலவையான விமர்சனங்கள் சந்தித்து வந்த போதும் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டில் வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் மட்டும் பிரமாண்ட படமான ’பாகுபலி-2’க்கு பின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
மெர்சல் படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ. 31.50 கோடி வசூல் செய்துள்ள.
தவிர, இந்தியாவைத்தவிர மற்ற இடங்களில் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளது.
ஒட்டு மொத்தமாக முதல் நாளில் மட்டும் தளபதியின் மெர்சல் படம் மொத்தமாக ரூ. 43.50 கோடியை வசூல் செய்துள்ளது.

No comments:
Post a Comment