Search This Blog

Friday, October 13, 2017

தாடி வளர்க்க ஆசைப்படுபவர்கள் மொதல்ல இந்த எண்ணெயை வாங்கி தடவுங்க...



தாடி வைத்திருக்கும் ஆண்கள், பெண்களின் பார்வையிலிருந்து தப்புவதே இல்லை. கிளீன் ஷேவ் ஆண்களைவிட தாடி வைத்திருக்கும் ஆண்கள் தான் அதிகமாகப் பெண்களைக் கவர்கிறார்கள்.

அதனாலேயே பலபேர் தாடியுடன் திரிகிறார்கள். ஆனால், தாடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிற அளவுக்கு, அதைப் பராமரிப்பதற்கான அக்கறை இருப்பதில்லை என்பது தான் உண்மை.

அதற்கு பார்லர், சலூன் என அதிகம் மெனக்கெடத் தேவையே இல்லை. வீட்டிலேயே சில எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதால், உங்கள் தாடியை அழகாக வளர்த்திட முடியும்.



லேவண்டர் ஆயில்

இது ஆன்டி-மைக்ரோஃபில்களைக் கொண்டது. முடியின் வேர்கள் வரை சென்று, பொடுகுத் தொல்லையைப் போக்குவதில் சிறப்பாக செயல்படும்.

சீடர்வுட் ஆயில்

முடியின் வேர்க்காலில் ஊடுருவிச் சென்று முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

ரோஸ்மெரி ஆயில்

ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. மேலும், முடியைப் பளபளப்பாக வைத்திருப்பதோடு, அடர்த்தியாகவும் காட்டும்.

லெமன்கிராஸ் ஆயில்

முடியை வலிமையாக்குகிறது. முடி உதிர்வதிலிருந்தும் சேதமடையாமலும் காக்கிறது.



இந்த ஆயில்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு, தினமும் இரவு தூங்கச் செல்லும்முன், தாடியை மசாஜ் செய்யுங்கள். தாடி அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் செழித்து வளர்வதை நீங்களே உணர்வீர்கள்.

No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...