Search This Blog

Showing posts with label Boys. Show all posts
Showing posts with label Boys. Show all posts

Saturday, October 28, 2017

ஆண்குறியைப் பெரிதாக்கும் முறைகள்: ஆண்குறியை எப்படிப் பெரிதாக்குவது?






ஒரு மனிதனின் பாலியல் செயல்திறன் மற்றும் இனப்பெருக்கத் திறன் அவனது ஆண்குறியின் அளவுடன் பெரும்பாலும் தவறாகத் தொடர்புபடுத்தப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக, ஆண்குறியின் அளவு ஆண்களுக்கு பெரும் பதட்டம் உண்டாக காரணமாகிவிடுகிறது. சாதாரண அளவில் ஆண்குறி கொண்டுள்ள பல ஆண்கள் அவர்களது ஆண்குறி சிறியதாக இருப்பதாக கவலைப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆண்குறியின் அளவு குறித்த கவலையானது அவர்களது பாலியல் நம்பிக்கை மற்றும் செயல்திறனை பாதித்துவிடும். மேலும் சிலருக்கு விறைப்புத் தன்மை அடைவதில் சிரமம் ஏற்பட இது காரணமாகிவிடலாம்.
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் சிறுநீரக சிறப்பு மருத்துவரிடம். குறிப்பிடத்தக்க ஆண் நோயாளிகள் ஆண்குறி விரிவாக்க அறுவை சிகிச்சை குறித்து பல கேள்விகள் கேட்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவர்களுக்கு, பிரச்சினை கீழே இல்லை, ஆனால் மேலே மூளையில் இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்து தங்களது ஆண்குறியை பெரிதாக்கிக் கொள்ள நினைக்கும் பல ஆண்களுக்கு அவர்களது ஆண்குறி சாதாரண அளவிலும், முழுமையான செயல்திறனுடனும் இருக்கிறது, ஆனால் அவர்கள் தங்களது ஆண்குறி சிறியதாக இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறார்கள் (இது பெனைல் டிஸ்மார்பிசம் குறைபாடு என அறியப்படுகிறது).
இது ஆண்குறி விரிவாக்க பொருட்கள் ஒரு பெரிய தொழில்துறையாக உருவாக வித்திட்டிருக்கிறது. ஆண்குறியை பெரிதாக்குவதாக கூறிக்கொண்டு ஆன்லைனில் பெரும்பாலும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாத மாத்திரைகள், சப்ளிமெண்டுகள், எண்ணெய்கள் மற்றும் கிரீம்கள் கிடைக்கின்றன. இந்த சிகிச்சைகளில் பல பெரும்பாலும் பலனற்றவையாக, அதிக செலவுள்ளவையாக மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடியவையாக உள்ளன. இதில் அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அல்லாதவை உள்ளிட்ட இரண்டு முறைகளிலும் தேர்வுகள் இருக்கின்றன.
அறுவை சிகிச்சை அல்லாத முறைகள் (Non-Surgical Methods)
மாத்திரைகள் மற்றும் களிம்புகள் (Pills and Ointments)
ஆண்குறியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு மூலிகைகள், வைட்டமின்கள், ஹார்மோன்கள் அல்லது கனிமங்கள் அடங்கிய பல மாத்திரைகள், களிம்புகள், லோசன்கள், கிரீம்கள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் ஏதும் வேலை செய்யாது. எந்த மாத்திரை அல்லது லோசனும் ஆண்குறியின் விரிவாக்கத்திற்கு காரணமாவதாக மருத்துவச் சான்றுகள் ஏதுமில்லை. இவற்றில் சில உடலுக்கு கேடு விளைவிப்பதாகவும் இருக்கக் கூடும்.


ஜெல்கிங் (Jelqing)
ஜெல்கிங் எனப்படுவது ஆண்குறியை ஈர்த்து, அதனை அடிப்பகுதியில் இருந்து நுனி வரை தொடர்ந்து மெதுவாக உருவிவிடக்கூடிய முறை ஆகும். இது உருவி விடுதல், மில்கிங் அல்லது ஆண்குறி நீட்சி எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்குறிக்குள் இரத்தத்தை துரிதமாக செலுத்தி, ஆண்குறியின் விறைப்புத் திசுவின் இரத்தம் வைத்திருக்கும் திறனை அதிகப்படுத்துவதே இந்த இழுத்துவிடுதல் பயிற்சியின் அடிப்படை ஆகும். எனினும், ஜெல்கிங்கினால் ஆண்குறியின் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் என்ற அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.
இழுவை (Traction)
ஆண்குறி இழுவை சிகிச்சை என்பது தொய்ந்த ஆண்குறியை நீளும் ஆண்குறியாக மாற்றும் வகையில் அதிகரிக்கும் இயந்திர இழுவை (துரித இழுவை) செய்யப்படும் முறை ஆகும். இந்த துரித இழுவையானது ஆண்குறியின் மீது எடைகளை பிரயோகிக்கும் வடிவமாகவோ அல்லது ஆண்குறி இழுவை சாதனம் என அழைக்கப்படும் சிறப்பு சாதனத்தைப் பயன்படுத்துவதாகவோ இருக்கலாம். இவ்வாறு எடைகளை ஆண்குறியில் தொங்கவிடுவதால் அது நீள்வதாக ஆதாரம் ஏதுமில்லை. மேலும் இதனால் ஆண்குறியில் காயம் ஏற்பட்டுவிடக்கூடும். இதில் மற்றொரு முறை ஆண்குறி இழுவை சாதனத்தைப் பயன்படுத்துவதாகும். ஆண்குறி அசாதரணமாக வளைந்திருக்கக் கூடிய நிலையான பெரோனியின் நோய் என அறியப்படும் நிலைகளில் ஆண்குறி இழுவை சாதனங்கள் பெரும்பாலும் ஆய்வுசெய்ய பயன்படுகின்றன.
இந்த ஆண்குறி இழுவை சாதனம் பிளாஸ்டிக்கால் ஆன ஆதரவு ரிங், ஒரு சிலிக்கான் பேண்ட் மற்றும் இரண்டு மாறும் தண்டுகளால் ஆனது. ஆண்குறியானது இழுவை சாதனத்தில் உள்ள தொட்டிலில் தொங்கவிடப்படுகிறது. ஒவ்வொரு சிலவாரங்களுக்குப் பிறகும், மாறும் தண்டுகள் மற்றும் தொட்டில் ஃபிரேமுக்கு சிறு உலோக நீட்டிப்பு செய்வதன் மூலம் படிப்படியாக மென்மையாக துரித இழுவை அதிகரிக்கப்படுகிறது. இந்த துரித இழுவை சாதனம் தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை (சில ஆய்வுகளில் ஆறு மாதங்கள் வரை) பயன்படுத்தப்படும். சில ஆராய்ச்சிகளில் இந்த இழுவை சாதனம் 3-4 மாதங்களுக்கு தினமும் 6 முதல் 9 மணி நேரம் வரை பொருத்தப்பட்டதில் சராசரியாக ஆண்குறி நீளம் 1.7 – 1.8 செ.மீ அதிகரித்துள்ளது. இழுவை சாதனங்கள் ஆண்குறியை நீட்டிப்பதற்கான மற்றும் குறைபாட்டை சரிசெய்வதற்கான சில சாதகமான ஆதாரங்கள் இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தும் நபர் மிகவும் தாங்கும் திறனுடையவராக இருக்க வேண்டும். இதனைப் பயன்படுத்தும் நபருக்கு மிகவும் அதிக உடன்பாடும், உறுதியும் தேவை. எனினும், அவர்கள் ஒரு அனுபவமிக்க மருத்துவரின் (சிறுநீரக சிறப்பு மருத்துவர் அல்லது நோயியல் சிறப்பு மருத்துவர்) வழிகாட்டுதலின் கீழ் இதனை பயன்படுத்த வேண்டும்.
வெற்றிட சாதனங்கள் (ஆண்குறி குழாய்கள்) (Penile pumps)


வெற்றிட விறைப்பு சாதனம் (VED) முக்கியமாக ஆண்மையின்மை (விறைப்புத் தன்மை சீர்கேடு – ED) சிகிச்சைக்காக வடிவமைக்கப்பட்டது. ஆண்குறி குழாய்கள் ஆண்குறியைச் சுற்றி நிறுவப்படும் குழாய் வடிவ சாதனமாகும். மேலும் இதனைச் சுற்றி காற்று அடித்து உந்தப்பட்டு ஒரு வெற்றிடம் உருவாகும். இந்த வெற்றிடம் ஆண்குறியினுள் இரத்தத்தை ஈர்க்கும், இது விறைப்புத்தன்மை உருவாக காரணமாகலாம். புரோஸ்டேட் புற்றுநோய்க்கான புரோஸ்டேட்டக்டமி சிகிச்சை மேற்கொள்ளும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அடைய ஒரு மறுவாழ்வு நடவடிக்கையாக இதனைப் பயன்படுத்தும் போது, இது ஆண்குறியை பாதுகாப்பதற்கு அல்லது ஆண்குறி நீளம் சற்றே அதிகரிப்பதற்கு உதவுதாக அறியப்படுகிறது. ஆண்குறிக் செயற்கை உள்பதியவைத்தல் சிகிச்சை மேற்கொள்ளும் ED ஆல் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கு இதனைப் பயன்படுத்தி ஆய்வு செய்ததில், இது அவர்களது ஆண்குறி நீளம் பராமரிக்கப்பட உதவுவதாக அறியப்படுகிறது.
மக்கள் ஆண்குறியின் நீளம் அதிகரிக்க ஒரு உடல் சிகிச்சையாக (பல மாதங்களுக்கு ஒவ்வொரு வாரமும் மூன்று முதல் நான்கு 30 நிமிடங்கள் கொண்ட அமர்வுகள்) VED -ஐ முயற்சிக்கிறார்கள். எனினும், இதனால் ஆண்குறியின் நீளம் அதிகரிப்பதற்கான எந்த மருத்துவச் சான்றுகளும் இல்லை. மேலும், ஆண்குறி குழாய்களை அதிகம் பயன்படுத்துவதால் ஆண்குறி திசு சேதமாகிவிடக்கூடும் (ஃபைப்ரோசிஸ் என அறியப்படும் வடு உருவாக்கத்திற்கு வழிவகுக்கும்), இது பலவீனமான விறைப்புத்தன்மை ஏற்பட வழிவகுத்துவிடும். இதில் வெற்றிட வரம்பி பயன்படுத்தப்படாத போது, அதன் துரித நிலை அதிகரித்து ஆண்குறியில் காயம் ஏற்பட காரணமாகிவிடும். மேலும் கடுமையான சூழல்களில், ஆண்குறி திசுவில் தீவிர காயம் ஏற்படக் கூடும்.
அறுவை சிகிச்சை முறைகள் (Surgical Methods)
ஆண்குறி நீட்டிப்பு அறுவை சிகிச்சை (Penis Lengthening Surgery)
ஆண்குறியின் பின்னால் உள்ள எலும்புடன் அதனை இணைக்கும் தசை நார் அதன் தண்டு சிறிதளவு வெளியேறும்படி வெட்டிவிடப்படுகிறது. இந்த தசை நார் வெட்டி விடப்படும் போது, ஆண்குறி கீழே தொங்கும், இதனால் அது நீண்டதாகத் தோன்றும். இந்த தசை நார் பொதுவாக விறைப்புத்தன்மை அடைந்த ஆண்குறி மேல்நோக்கி இருப்பதற்கு உதவுவதற்கு செயல்படுகிறது. எலும்பில் இருந்து இந்த தசை நார் வெட்டப்பட்ட பிறகு, ஆண்குறி விறைப்புத்தன்மையில் இருக்கும் போது சற்று கீழே இறங்கி இருக்கலாம். இந்த நடைமுறையினால் ஆண்குறியின் நீளம் சராசரியாக 1.3 செ.மீ அதிகரிக்கலாம். எனினும், இந்த அறுவை சிகிச்சையினால் ஆண்களுக்கு திருப்தி ஏற்படும் விகிதம் மிகவும் குறைவாகவே (35%) இருக்கிறது.
பிற ஆண்குறி நீட்டிப்பு முறைகள் ஆண்குறியின் வெளிப்பகுதியை நீட்டிப்பதற்காக தோல் மடிப்பை பயன்படுத்துவதை உள்ளடக்கியதாகும். மேலும், தசை நார் வெளிப்பாடு தோல் மடிப்பு நடைமுறையுடன் இணைந்து செய்யப்படும் போது 1-2 செ.மீ நீளம் அதிகரிக்கக் கூடும். வடுக்கள், கணு உருவாக்கம், கீழறங்கி தொங்கும் ஆண்குறி, தொற்று மற்றும் ஆணுறுப்பில் குறைபாடு உள்ளிட்டவை இந்த வளர்ச்சி அறுவை சிகிச்சையின் முக்கிய வரம்பெல்லையாகும்.
ஆண்குறி சுற்றளவு அதிகரிப்பு அறுவை சிகிச்சை (Penis girth increasing surgery)
இந்த அறுவை சிகிச்சை முறையில், ஆண்குறியின் தடிமன் (சுற்றளவு) அதிகரிக்கிறது. ஆண்குறியின் அடிப்பகுதியில் உள்ள தோலில் வெவ்வேறு திசுக்களை (கொழுப்பில்லாத அல்லது அடித்தோல் ஒட்டு) அல்லது மக்கும் பொருளை பொருத்துதல் இதனை அடைவதற்கான ஒரு முறை ஆகும். ஆண்குறியில் உள்ள பஞ்சு போன்ற விறைப்புத் திசுவுக்கு கூடுதல் பலமளிக்க (கேவர்னோசல் பெரிதாக்கல் நடைமுறை) உடலில் உள்ள நரம்புகளை (சேபனஸ் நரம்பு ஒட்டுக்கள் போன்றவை) பயன்படுத்துவது மற்றொரு நடைமுறை ஆகும். கொழுப்பு உட்செலுத்துதல்கள் மீண்டும் உறிஞ்சப்பட்டு சுருங்கி விடுவதால் ஏமாற்றமளிக்கும் முடிவுகளைக் கொண்டிருக்கின்றன. மேலும் இதில் கொழுப்பு உருண்டையாக பரவுவதால் கட்டிகள் ஏற்பட காரணமாகிவிடுவதுடன், ஆண்குறியின் வடிவமும் உருமாறிவிடக் கூடும். ஆண்குறியின் தோலுக்கு கீழ் மக்கும் ஃப்ரேம்களை உள்நுழைப்பதால் சிறந்த முடிவுகள் ஏற்படுகின்றன.


லிப்போசக்சன் (Liposuction)
முன்னால் நீட்டிக்கொண்டிருக்கும் தொப்பை உள்ள பருமனான ஆண்களுக்கு ஆண்குறியின் அடிப்பகுதி கொழுப்பான தோலில் புதைக்கப்பட்டதைப் போன்று தோன்றலாம். இந்த கொழுப்பை லிப்போசக்சன் முறையில் நீக்குவதம் மூலமாக ஆண்குறியானது தோலினுள் குறைவாக புதைந்திருப்பது போல் தோன்றும் மற்றும் தண்டுப்பகுதி பெருமளவு வெளியே தெரியும். ஆண்குறியானது ஒன்று அல்லது இரண்டு சென்டி மீட்டர் நீண்டிருப்பது போல் தோன்றும், எனினும் அந்த நபர் உணவு மற்றும் உடற்பயிற்சியை பராமரிக்கவில்லை எனில், அவருக்கு மீண்டும் எடை மற்றும் கொழுப்பு கூடி குறைந்த நாட்களே இந்த விளைவுகள் தோன்றலாம். லிப்போசக்சன் நடைமுறையும் அதன் அபாயங்களைக் கொண்டிருக்கிறது.
ஆண்குறி விரிவாக்க நடைமுறைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான சரியான நபர்கள் யார்? (Who are the right candidates for penis enhancement procedures and surgery?)
5 செ.மீ நீளத்திற்கும் குறைவான மிகவும் சிறிய ஆண்குறி (நுண்ணிய ஆண்குறி) கொண்ட ஆண்கள் இந்த நடைமுறைகள் பற்றிய ஆபத்துகள் மற்றும் நன்மைகளை விரிவாக தெரிந்து கொண்ட பிறகு ஆண்குறி விரிவாக்க அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

தங்களது ஆண்குறியின் அளவு குறித்து ஏக்கப்படும் மற்றும் ஆண்குறி விரிவாக்க நடைமுறைகளுக்காக அறுவை சிகிச்சை நிபுணரை சந்திக்கும் பெரும்பாலான ஆண்கள் அவர்களது ஆண்குறியின் புற அமைப்பு குறித்து பயந்தவர்களாகவும், அவர்களது சாதாரண அளவில் உள்ள ஆண்குறி குறித்த தேவையற்ற கவலை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அத்தகைய ஆண்களுக்கு முதலில் எந்த நடைமுறையும் செய்யப்படுவதற்கு முன் அத்தகைய மனநிலையில் இருந்து வெளிவர ஆலோசனை தரப்படுகிறது. இத்தகைய அதிகரித்தல் நடைமுறைகள் எப்போதும் வெற்றிகரமாக இருப்பதில்லை, அறுவை சிகிச்சைக்குப் பிறகு திருப்தி ஏற்படுதல் பொதுவாக மோசமாக இருக்கிறது மற்றும் தொற்று, வடு உருவாக்கம், முடிச்சு உருவாக்கம், முரண்பாடான ஆண்குறி குறுக்கம், உட்செலுத்தப்படும் பொருள் இடம்பெயர்வு மற்றும் பாலியல் பிறழ்ச்சி போன்ற சிக்கல்கள் பொதுவாக ஏற்படும் முதலியவை அவர்களுக்கு விளக்கி புரிந்துகொள்ள வைக்கப்படுகிறது. இந்த மனநிலையில் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கு முறையான ஆலோசனை வழங்குவதால் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நினைப்பு குறைந்துவிடலாம்.

சுருக்கமாக, ஆண்குறி விரிவாக்க அறுவை சிகிச்சையினால் 1-2 செ.மீ நீளமும், 1-2.5 செ.மீ சுற்றளவும் அதிகரிக்கக் கூடும். ஆனால் இந்த நடைமுறைகள் தேவையற்ற சிக்கல்களை விளைவிக்கும் ஆபத்தையும், ஏமாற்றமளிக்கும் திருப்திகர விகிதத்தையும் கொண்டதாக இருக்கின்றன. ஆண்குறி விரிவாக்கத்திற்கான காஸ்மெடிக் அறுவை சிகிச்சைகள் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன. பெரும்பாலான இந்த நடைமுறைகள் இன்னும் ஆய்வுக்குட்பட்டவையாகவே இருக்கின்றன. மேலும் மற்ற எந்த குறைந்தபட்ச அளவீடுகளும் தோல்வியடைந்த பிறகு இறுதியாக உண்மையிலேயே மிகவும் சிறிய ஆண்குறி கொண்டுள்ள ஆண்களுக்கு மட்டுமே இவை பரிந்துரைக்கப்படுகின்றன

Tuesday, October 24, 2017

ஆண்மைக்குறைபாடு யாருக்கெல்லாம் உண்டாகும்?… எப்படி கண்டுபிடிப்பது?..






நரம்புகள் பலம் குறைந்து தளர்ச்சி அடைந்து இல்லற வாழ்வில் ஓர் ஆணால் முழு இன்பம் அடைய முடியாமையையே ஆண்மைக்குறைவு என்கிறோம். இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
மனஅழுத்தம் அதிகமாக இருந்தாலும்கூட நரம்புது் தளர்ச்சி உண்டாகும்.
நோய்வாய்ப்பட்டதாலோ விபத்தாலோ தண்டுவடத்தில் அடிபட்டால்கூட நரம்புத் தளர்ச்சி உண்டாகி, ஆண்மைக்குறைபாடு ஏற்படும்.
குடி, போதைப் பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தாலும் ஆண்மைக்குறைபாடு ஏற்படும்.


விஷக் காய்ச்சல் அல்லது அம்மை போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு அதனால் சில பக்க விளைவாகவும் நரம்புத் தளச்சி ஏற்படலாம்.
நரம்புத் தளர்ச்சிக்கென சில அறிகுறிகள் இருக்கின்றன. கீழ்வரும் சில அறிகுறிகள் ஆண்மைக்குறைபாட்டை பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.
தாம்பத்திய உறவின்போது ஆணுறுப்பு விரைவில் துவண்டு விடுதல். விறைப்பு இருந்த போதிலும் விந்து வெளியேறி விடுவது.
விந்து வெளியேறாமலேயே இருப்பது.
இந்த அறிகுறிகள் எல்லாம் நரம்புத் தளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள். ஆனாலும் இதை மருத்துவ ரீதியாக சரி செய்ய முடியும். இதுவொரு குறைபாடுதான். நோய் அல்ல. ஆகவே, இதனை எளிய மூலிகை மருந்துகள் மூலம் சரி செய்ய முடியும்.


ஊட்டச்சத்துக்கள் மிக்க உணவுகள், பாதாம், வால்நட் போன்ற பருப்பு வகைகள் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆண்மைக்குறைபாடு நீங்கி, விந்தணு வீரியம் பெறும்.

ஆண்களின் உணர்ச்சிகளை தூண்ட பெண்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா..?






உடலுறவில் ஈடுபடுதல், கொஞ்சி குலாவுதல் தான் உணர்ச்சி நிலை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும். ஆனால், இதை தவிர்த்து, பொதுவான சில காரியங்கள் மற்றும் சில தருணங்களில் கூட ஆண்களுக்கு உணர்ச்சி நிலை மேலோங்க வாய்ப்புகள் உண்டு. அவை என்னென்று பார்க்கலாம்.
மற்ற வண்ணங்களை விட சிவப்பு நிற உடை ஆண்களின் உணர்சிகளை தூண்டுகிறதாம். சிவப்பு நிறம் இயற்கையாகவே ஆண், பெண் மத்தியில் உணர்ச்சிகளை தூண்டும் தன்மை கொண்டுள்ளது என ஆய்வுகள் மூலமாகவும் கண்டறியப்பட்டுள்ளன.
அடர்த்தியான தன்மை கொண்ட வாசனை திரவியம் பயன்படுத்தும் பெண்கள் அருகில் வருகையில், அதை சுவாசிக்கும் போது ஆண்களுக்கு உணர்ச்சி மேலோங்குகிறது.


சில ஆண்களுக்கு கண்ணாடியில் தங்கள் உடலையே பார்த்து ரசிக்கும் போது உணர்ச்சி அதிகரிக்கிறது.
தனது துணை, தன் முதுகை தேய்த்து குளிப்பாட்டும் போதுமட்டுமல்ல, அரிக்கும் போது முதுகை சொறிந்துவிட்டால் கூட ஆண்களுக்கு உணர்ச்சி அதிகரிக்குமாம்.
துவைத்த சுத்தமான படுக்கை விரிப்புகள் கொண்ட படுக்கையில் படுக்கும் போது ஆண்களுக்கு உணர்ச்சி அலை சுனாமி போல பொங்குகிறது. அந்த நேரத்தில் மனைவி அருகில் இருந்தால் சொல்லவே வேண்டாம்.


மனைவி, வீட்டில் தங்களது உடையை உடுத்தி வேலை செய்கையில் ஆண்களுக்கு உணர்ச்சி அதிகரிக்கிறது. இதை பற்றி நசுக்காக தெரிந்து தான் பெண்கள் கணவரின் உடையை அணிந்து கணவரின் உணர்ச்சியை தூண்டி விடுகின்றனர்.
காலை எழுந்தவுடன், துணை முத்தமிட்டு நாளை துவக்கும் போது ஆண்கள் அந்த நாள் முழுவதுமே உணர்ச்சி நிலை மோலோங்கி தான் காணப்படுவார்களாம். தன் துணை மகிழ்ச்சித்து, சிரிக்க சிரிக்க பேசும் தருணங்களில் ஆணுக்கு உணர்ச்சி அலைகள் மேலோங்குகிறது. அதுவும் மனைவி தன்னை தொட்டு தொட்டு பேசி சிரிக்கும் போது கணவரால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது.

Sunday, October 15, 2017

ஆண்களே.. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது இதெல்லாம் பண்ணிருக்கீங்களா?



நீங்கள் என்னதான் உங்கள் மனைவி மீது அன்பு, அக்கறை வைத்திருந்தாலும் கூட, கர்ப்பமாக இருக்கும் போது கொஞ்சம் அதிக அன்பையும், அக்கறையையும் செலுத்த வேண்டும்.
ஏனெனில், அவரது வயிற்றில் வளர்வது உங்கள் கரு. கர்ப்பமான பிறகு பெண்கள் மனதில் அதிகரிக்கும் சந்தோசத்தை விட அதிகமாக அச்சமும் இருக்கும்.
கர்ப்ப காலம் கரு ஆரோக்கியமாக வளருமா, எந்த பிரச்சனையும் வந்துவிட கூடாது என மனதில் ஒரு குழப்பம் இருந்துக் கொண்டே இருக்கும்.
வெளியே…
வேலைக்கு பெண்ணாகவே இருந்தாலும் கூட, கர்ப்பம் அடைந்த பிறகு சில மாதங்களுக்கு பிறகு வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, நீங்கள் ஃப்ரீயாக இருக்கும் போதுமட்டும் இல்லாமல், அவரை இலகுவாக உணர செய்ய, எங்கேனும் அழைத்து செல்லுங்கள்.


ஷாப்பிங்!
இருவரும் சேர்ந்து ஒன்றாக பிறக்கவிருக்கும் குழந்தைக்கு தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்து வர சென்று வரலாம். இது அழகான தருணமாக மட்டுமில்லாமல், நீங்காத நினைவாகவும் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்…
நேரம்…
அவருடன் தனிமையில், அமைதியான பொழுதில் நேரம் செலவழிக்க மறக்க வேண்டாம். அவர் மனதும், உடலும் இலகுவாக உணர உடன் இருந்து உதவுங்கள். உங்கள் உயிரை சுமந்துக் கொண்டிருக்கும் அவரை அழகாக உணர செய்யுங்கள். பிரசவம் குறித்த அச்சம் இருக்கும், அதை போக்கி, ஊக்கமளியுங்கள்.
காத்தாட…
பிரசவ நேரத்தில் அவர்கள் சோர்வாக தான் உணர்வார்கள். அதை ப போக்க தினமும் காலை, மாலை வாக்கிங் சென்றுவர கூறுவார்கள். அவர்களை வாக்கிங் சென்றுவா என அனுப்பாமல், உடன் நீங்களும் சென்று வாருங்கள். இதனால் அவரும் வலிமையாக இருப்பார்கள், உங்கள் உறவும் ஆரோக்கியமாக இருக்கும்.
பழக்கம்!
ஒருவேளை உங்களுக்கு குடி, புகை இருந்தால், குறைந்தபட்சம் அவர் கர்ப்பமாக இருக்கும் காலத்திலாவது நிறுத்திக் கொள்ளலாம். இது அவர் மனம் நிம்மதியாக இருக்க செய்யும். தேவையற்ற மனவேதனை அளிக்காது.


ஆரோக்கியம்!
கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமணா டயட் முக்கியம். அவர் என்ன உணவு உண்கிறார், எதை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும், எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.
பேசுங்க…
கருவில் வளரும் குழந்தையுடன் பேசுங்க. வயிற்றை தடவி கொண்டுங்கள்., முதல் முதையை முகத்தை வைத்தும் உணரலாம், வளரும் போதே முத்தங்கள் இட்டு உங்கள் அன்பை செலுத்தலாம்.

Friday, October 13, 2017

தாடி வளர்க்க ஆசைப்படுபவர்கள் மொதல்ல இந்த எண்ணெயை வாங்கி தடவுங்க...



தாடி வைத்திருக்கும் ஆண்கள், பெண்களின் பார்வையிலிருந்து தப்புவதே இல்லை. கிளீன் ஷேவ் ஆண்களைவிட தாடி வைத்திருக்கும் ஆண்கள் தான் அதிகமாகப் பெண்களைக் கவர்கிறார்கள்.

அதனாலேயே பலபேர் தாடியுடன் திரிகிறார்கள். ஆனால், தாடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிற அளவுக்கு, அதைப் பராமரிப்பதற்கான அக்கறை இருப்பதில்லை என்பது தான் உண்மை.

அதற்கு பார்லர், சலூன் என அதிகம் மெனக்கெடத் தேவையே இல்லை. வீட்டிலேயே சில எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதால், உங்கள் தாடியை அழகாக வளர்த்திட முடியும்.



லேவண்டர் ஆயில்

இது ஆன்டி-மைக்ரோஃபில்களைக் கொண்டது. முடியின் வேர்கள் வரை சென்று, பொடுகுத் தொல்லையைப் போக்குவதில் சிறப்பாக செயல்படும்.

சீடர்வுட் ஆயில்

முடியின் வேர்க்காலில் ஊடுருவிச் சென்று முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

ரோஸ்மெரி ஆயில்

ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. மேலும், முடியைப் பளபளப்பாக வைத்திருப்பதோடு, அடர்த்தியாகவும் காட்டும்.

லெமன்கிராஸ் ஆயில்

முடியை வலிமையாக்குகிறது. முடி உதிர்வதிலிருந்தும் சேதமடையாமலும் காக்கிறது.



இந்த ஆயில்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு, தினமும் இரவு தூங்கச் செல்லும்முன், தாடியை மசாஜ் செய்யுங்கள். தாடி அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் செழித்து வளர்வதை நீங்களே உணர்வீர்கள்.

Sunday, October 8, 2017

பெண்கள் உடலுறவில் அதிக இன்பமடைய என்ன செய்ய வேண்டும்?...




உடலுறவில் ஈடுபடும் போது ஆண்கள் எளிதாக உச்சமடைந்து விடுவார்கள். ஆனால், பெண்கள் உச்சமடைவதற்கு தான் கொஞ்சம் தாமதம் ஆகும். இது மனித வாழ்வியலில் இயற்கையான ஒன்று தான். இதற்கு ஒரே தீர்வு ஆண்களிடம் தான் இருக்கிறது.

எப்போதெல்லாம் உடலுறவு கொள்வது நல்லதுன்னு உங்களுக்கு தெரியுமா?


பெண்களின் அந்தரங்க பகுதிகளில் விளையாடுதல் அவர்களை உடலுறவில் உச்சமடைய வைக்க உதவும். ஆனால், ஆனால் இயற்கையாகவே பெண்களும் உச்சமடைய சில வழிமுறைகளும் உள்ளன.



அமெரிக்காவில் இருக்கும் மெச்சிகன் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், நன்கு ஓய்வெடுக்கும் இல்லத்தரசிகள் உடலுறவில் நல்ல உச்சமடைகின்றனர் என்று கூறப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கிடையே நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், யாரெல்லாம் நன்கு உறங்குகிறார்களோ, அவர்கள் எல்லாம் மறுநாள் உறவில் ஈடுபடும் போது நல்ல உச்சம் காண்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக பெண்கள் தூங்குவதைவிட ஒரு மணி நேரம் அதிகமாக தூங்குவதனால், 14% வரை அவர்கள் மறுநாள் உடலுறவில் ஈடுபடும்போது உச்சம் காண்கிறார்களாம்

பெரும்பாலும் பெண்கள் உடலுறவில் இயற்கையாக உச்சம் காண மாட்டார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், நல்ல ஆழமான, அமைதியான உறக்கம் இயற்கையாகவே பெண்கள் உச்சமடைய உதவுகிறதாம்.

ஆண்களுக்கு நல்ல இரத்த ஓட்டம் இருந்தால் விறைப்புத்தன்மை அதிகரிப்பது போல, பெண்களுக்கு நல்ல ஓய்வும், உறக்கமும் இயற்கையாக உச்சமடைய உதவுகிறது என்று கூறுகிறார்கள்.



இதே ஆராய்ச்சியில், நல்ல ஓய்வும், உறக்கமும் இல்லாத ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது

Saturday, October 7, 2017

பசங்க ஏன் பொண்ணுங்ககிட்ட பொய் சொல்றாங்கன்னு தெரியுமா?

why-men-telling-lie-with-women



இல்லற வாழ்க்கையின் உறவில், தங்கள் மனைவியிடம் பெரும்பாலான ஆண்கள் எக்கச்சக்கமாக பொய் கூறுவதுண்டு. அதற்குக் காரணம் அவர்கள் தன்னுடைய துணையிடம் நேர்மையாக இல்லையென்று அர்த்தமில்லை.

அப்படி தன்னுடைய வாழ்க்கைத் துணையிடம் ஏன் ஆண்கள் பொய் சொல்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?



ஆண்களே சில காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள்.

தனது மனைவி தன்னை விட மிக அழகாகவும், கவர்ச்சியாக இருப்பதால், அவள் மீது சில சந்தேகம் ஏற்படும். இதனால் உறவில் ஏமாற்றும் உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு சிறு பகுதி தான்.



தன்னுடைய மனைவியை விட வேறு ஒரு பெண் தன்னை அதிகமாக விரும்பி, தன்மீது அதிக அன்பாகவும் புரிதலுடனும் அரவணைத்துச் செல்லும் சமயங்களில், மனைவியிடம் பொய் சொல்லி ஏமாற்ற நேரிடுகிறது.

தாம்பத்திய உறவில் தனது மனைவி, தன்னுடைய விருப்பங்களை நிவர்த்தி செய்யாத போது, அதிகமாக ஈடுபட மறுப்பு தெரிவிக்கும் போது, தன்னை நுசிப்பவரை தேடிச் செல்லும் போது பொய் சொல்லி, ஏமாற்ற வேண்டிய கட்டாயம் வருகிறது.

தனது மனைவியுடன் சேர்ந்த வாழ்க்கையில் எவ்வித சுவாரஸ்யங்களும் இல்லை. அதனால் தனது வாழ்க்கையின் மீது வெறுப்பாக உணரும் பட்சத்தில், ஏமாற்றும் உணர்வுகள் உருவாகிறது.

தங்களுடைய மனைவி எந்த சமயங்களிலும் தங்களின் மீது நம்பிக்கை வைக்காமலே பேசிக்கொண்டிருக்கும்போது, தன்னுடைய உணர்வை மதிக்கும் வேறு நபர் தேவைப்படுகிறார்.



ஒரு இனிமையான இல்லற வாழ்க்கையில் புரிதல், அன்பு எனும் உணர்வு மிகவும் முக்கியம். எனவே கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள மறுக்கும்போது, தான் செய்வது தான் சரியாக இருக்க முடியும், தன்னுடைய கணவர் என்ன சொன்னாலும் அது உருப்படாது என்பது போன்ற நடவடிக்கைகள் ஆண்களை எரிச்சலடையச் செய்கின்றனவாம். அதனாலேயே பல சமயங்களில் ஆண்கள் மனைவியிடம் பொய் சொல்கிறார்களாம்

Tuesday, October 3, 2017

காதலிக்காதவர்கள் எந்தெந்த விஷயத்துல எல்லாம் லக்கி தெரியுமா?...

happiness-of-being-single


அந்த கண்மூடித்தனமான காதல் நம்மை பிற விஷயங்களை விட்டு, விலக்கிவிடுகிறது. நட்புகளை தூரமாக ஒதுக்கி வைத்துவிடுகிறது. அதேசமயம் இதுபோல் காதல் இல்லாமல் தனியாக சிங்கிளாக வாழ்பவர்களுக்கு தனக்கென தனியு ஒரு உறவு இல்லை என்ற வருத்தம் இருந்தாலும் நிறைய விஷயங்களில் அவர்களுக்கு கிடைக்கிறது.

அப்படி சிங்கிளாக இருப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும்?... எப்படியெல்லாம் வாழ்க்கையை அனுபவிக்கலாம்?

சிங்கிளாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடலாம், அவர்களுடன் சேர்ந்து ஜாலியாக வெளியில் செல்லாம், இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

ஆனால், நீங்கள் காதலித்துக் கொண்டிருந்தால், உங்களின் முழு நேரமும் அவர்களுடனேயே செலவிட வேண்டியிருக்கும். அவர்களுடன் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டி வரும். அவர்களை சமாதானப் படுத்த வேண்டும். இப்படி உங்கள் உலகம் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிவிடும்.



செலவுகள் மிச்சமாகும். காதலர்கள் வெளியில் சென்றால், ஒருவருக்கொருவர் பிடித்ததை வாங்கி கொடுக்க வேண்டும், அவ்வாறு வாங்கி கொடுக்காவிட்டால் தேவையில்லாமல் வீண் சண்டை வரும்.

ஆனால், சிங்கிள் வாழ்க்கையில் இந்த மாதிரி பிரச்னைகளே கிடையாது.  நீங்களு ராஜா, நீங்களே மந்திரி. உங்களைப் பிடித்ததை வாங்கலாம். சாப்பிடலாம். ஜாலியாக உங்கள் மனசு சொல்வதைக் கேட்கலாம். பிடித்த இடத்துக்குச் செல்ல முடியும்

அதிலும் குறிப்பாக, ஆண்கள் யாரை வேண்டுமானாலும் சைட் அடித்துக்கொள்ளலாம், ஆனால் உங்கள் துணையுடன் இருக்கையில் யாரேனும் பெண்ணை ஒரு நாள் சைட் அடித்திருப்பீர்கள், ஆனால் அதற்காக ஒரு வாரத்திற்கு சண்டை போட வேண்டியிருக்கும்.

சிங்கிளாக இருந்தால் சுதந்திரமாக இருக்க முடியும். ஆனால் காதலில் விழுந்தால், ஏதேனும் ஒரு பொறுப்பு இருந்துகொண்டே இருக்கும்.

போன் பேசுவது, ஒன்றாக சேர்ந்து வெளியில் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை, திட்டமிட்ட நாட்களை மாற்ற முடியாமல் திணறுவது என பல தொந்தரவுகள் இருக்கும்.

மன நிம்மதி குறைவாகத்தான் இருக்கும். ஏனெனில் எப்படி திருமணம் செய்வது, பணம் செலவளிப்பது என எப்போதும் எதைப்பற்றியாவது சிந்திக்கொண்டே இருக்க வேண்டும்.



இந்த சந்தோஷங்கள் வேண்டுமென்று நினைப்பவர்கள் யாரையும் காதலிக்காமல் இருக்கலாம். அதேசமயம் எனக்கே எனக்காக ஒரு ஆள் தேவை என்று நினைப்பவர்கள் தாராளமாக காதலிக்கலாம். அதில் இருக்கும் சுகமே தனி தான்.

Monday, October 2, 2017

குறைந்தது ஒரு மணிநேரத்துக்கு ஒரு ஆணுடன் உறவு வைத்துக் கொள்ளும் பெண்கள்

குறைந்தது ஒரு மணிநேரத்துக்கு ஒரு ஆணுடன் உறவு வைத்துக் கொள்ளும் பெண்கள்




ஒரு முறை அந்த தொழிலுக்குள் சென்றுவிட்டாள், அதிலிருந்து மீண்டு வருவது என்பது அவர்களின் கனவிலும் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

இதுபோன்று பாலியல் தொழிலாளிகளாக்கப்படுவதற்கு, ஒரு பக்கம் சந்தர்ப்ப சூழ்நிலைகளை காரணம் காட்டினாலும், டெல்லியில் உள்ள பெர்னா சமூகத்தை சேர்ந்த பெண்களின் தலையெழுத்தே இந்த பாலியல் தொழில் என்றாகிவிட்டது.

அதனால் தான் அந்த இனத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் வாழையடி வாழையாக பாலியல் தொழிலை செய்து வருகிறார்கள். இந்த இனத்தில் எந்த பெண்ணும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இந்த தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த ஒரு பெண்ணும் குரல் கொடுப்பதில்லை, ஏனெனில் அது தான் தங்களின் தலைவிதி என்று நினைத்துக்கொண்டு பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

குடும்ப சூழலுக்காக இந்த தொழிலில் ஈடுபடும் பெண்களின் வாழ்க்கை தினமும் அதிகாலை 2 மணிக்கு தொடங்குகிறது.



2 மணிக்கு எழுந்து தங்களை அலங்காரம் செய்துகொண்டு வாடிக்கையாளர்களைக் குளிர்விக்கச் செல்லும் அவர்கள் ஐந்து மணி நேரத்துக்குள் 5 ஆண்களை மகிழ்விக்க வேண்டும். பின் விட்டுக்கு வந்து கணவன், குழந்தைகளுக்கு உணவு தயாரித்து பள்ளி அனுப்பிவிட்டு மீண்டும் தங்கள் பணியைத் தொடங்குவார்கள்.

திருமணம் முடிந்து 5 குழந்தைகளுக்குத் தாயான பின்பும் கூட, பலர் இந்த தொழிலை அவர்களுடைய கணவன்மார்களின் வற்புறுத்தலால் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த தொழிலில் பெண்களை ஈடுபடுத்துவதற்காக இடைத்தரகர்களும் உள்ளனர். ஒரு பெண் ஒரு இரவுக்கு 10 ஆண்களை திருப்திபடுத்த வேண்டும். குறைந்த பட்சம் 200 ஆண்களோடு போராட வேண்டிய நிலையும் ஏற்படும்.

டெல்லியில் ஏதேனும் கற்பழிப்பு சம்பவங்கள் நடந்தால் அது தலைப்பு செய்தியாகிவிடும், ஆனால் இந்த சமூகத்தை சேர்ந்த பெண்கள் தினம் தினம் கற்பழிக்கப்படுகிறார்கள்.

எந்த ராசிக்காரர்கள் உடலுறவு விஷயத்தில் கில்லாடிகள்... உங்க ராசி என்ன சொல்லுது?..

love




மேஷம்

இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம்



மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர்.

மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்தியம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வார்கள். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்

இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்தியத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது.

இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும்.

எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர்.



சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.

கன்னி

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள்.

இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசிக்காரர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்

யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல.



காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும்.

தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு

இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார்.

ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.



மகரம்

இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதேசமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு.

யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுடன் கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது.

காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும்.

புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மனரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர் பாலினத்தவருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்



மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக்காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார்.

எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக்காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார்.

இந்த ராசிக்காரர் உணர்ச்சியை தரக்கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக்காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...