பெண்களுக்கு பெண்ணுறுப்பில் ஒரு சில பிரச்சனைகள் வருகிறது. இதனால் அவர்கள் வெளியிடங்களுக்கு செல்லுதல், வேலைக்கு செல்லுதல் போன்ற நேரங்களில் அவர்களுக்கு இது பிரச்சனையை தருவதாக இருக்கும். மிகுந்த சிரமத்திற்கும் உள்ளாக்கும். பெண்ணுறுப்பில் ஏற்படும் பருக்கள் என்பது மிகவும் சாதாரணமானது தான். இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதனை மருந்துவரிடம் சொல்ல தயக்கம் காட்டுகிறார்கள். இந்த பருக்கள் வர காரணங்கள் பல. இவை பாக்டீர்யாக்களினால் உண்டாகும் பாதிப்புகள், மன அழுத்தம், மாத்திரைகள், ஹார்மோன் பிரச்சனைகளின் காரணமாக ஏற்படுகின்றன. பல பெண்கள் அந்தரங்க பகுதியில் வரும் இந்த பருக்களுக்கு இயற்கை முறையிலான வைத்தியத்தையே நாடுகின்றனர். ஏனென்றால் இதில் தான் எந்த விதமான பக்கவிளைவுகளும் இல்லை. இந்த பகுதியில் பெண்ணுறுப்பில் உண்டாகும் பருக்களுக்கான சிகிச்சை முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. உலர்வாக இருக்க வேண்டும் எல்லா நேரங்களிலும் உங்களது அந்தரங்க பகுதியை உலர்வாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மெல்லிய துண்டினாலோ அல்லது காட்டன் துணியினாலோ மிருதுவாக துடைத்து உலர்ந்த நிலையிலேயே வைத்துக் கொள்வது அவசியம். ஈரப்பதமாக இருத்தல் என்பது கண்டிப்பாக கூடாது.
2. சோப்புகள் ஆன்டி பாக்டீரியல் சோப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாசனையான சோப்புகள், கடின தன்மை கொண்ட சோப்புகள் போன்றவற்றை பயன்படுத்துவது கூடாது. இது உங்களது அந்தரங்க பகுதியில் உள்ள பி.எச் அளவை பாதிக்கும்.
3. வெதுவெதுப்பான நீர் அந்தரங்கபகுதியில் உள்ள பருக்களால் அரிப்புகள் உண்டாகும். இதனை விரல் நகங்களால் கீற தோன்றும் எனவே அடிக்கடி இவற்றை வெதுவெதுப்பான நீரை ஒரு மெல்லிசான டவளில் நனைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் அரிப்புகள் குறையும்.
4. ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகர் பருக்களால் உண்டாகும் பாக்டிரியாக்களின் பாதிப்புகளை குறைக்க வல்லது. எனவே இரண்டு கப் அளவு ஆப்பிள் சீடர் வினிகரில் ஒரு கப் அளவு தண்ணீர் கலந்து அந்த நீரினால் உங்களது பெண்ணுறுப்பை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் சுத்தமான டவளை கொண்டு அந்த இடத்தை உலர்த்திவிடுங்கள். இதனை ஒருநாளைக்கு மூன்று முறைகள் செய்வதன் மூலம் பாக்டீரியாக்களினால் உண்டாகும் பாதிப்புகளை குறைக்கும்.
5. உள்ளாடைகள் காட்டனால் ஆனால் மிருதுவான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும். காட்டன் உள்ளாடைகள் பருக்கள் மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை கொண்டது. அதோடு மட்டுமில்லாமல் இது உங்களது அந்தரங்க பகுதியை உரிய வெப்பநிலையில் வைத்திருக்கும் தன்மை கொண்டது. காற்றோட்டத்தையும் கொடுக்கும்.
6. இது வேண்டாம்! பெண்ணுறுப்பில் இந்த சமயத்தில் வாக்ஸிங், சேவிங் போன்ற செயல்களை செய்ய வேண்டாம் இது பருக்களை உடைய வைத்து பிற இடங்களுக்கு பரப்பும் தன்மை கொண்டதாகும்.
7. டீ ட்ரீ ஆயில் டீ ட்ரீ ஆயிலை பாதாம் ஆயிலை பாதாம் ஆயிலுடன் சேர்த்து அல்லது தேங்காய் எண்ணெய் உடன் கலந்து இந்த பருக்களின் மீது தடவலாம்.
ஒரு மனிதனின் பாலியல் செயல்திறன் மற்றும் இனப்பெருக்கத் திறன் அவனது ஆண்குறியின் அளவுடன் பெரும்பாலும் தவறாகத் தொடர்புபடுத்தப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக, ஆண்குறியின் அளவு ஆண்களுக்கு பெரும் பதட்டம் உண்டாக காரணமாகிவிடுகிறது. சாதாரண அளவில் ஆண்குறி கொண்டுள்ள பல ஆண்கள் அவர்களது ஆண்குறி சிறியதாக இருப்பதாக கவலைப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆண்குறியின் அளவு குறித்த கவலையானது அவர்களது பாலியல் நம்பிக்கை மற்றும் செயல்திறனை பாதித்துவிடும். மேலும் சிலருக்கு விறைப்புத் தன்மை அடைவதில் சிரமம் ஏற்பட இது காரணமாகிவிடலாம்.
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் சிறுநீரக சிறப்பு மருத்துவரிடம். குறிப்பிடத்தக்க ஆண் நோயாளிகள் ஆண்குறி விரிவாக்க அறுவை சிகிச்சை குறித்து பல கேள்விகள் கேட்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவர்களுக்கு, பிரச்சினை கீழே இல்லை, ஆனால் மேலே மூளையில் இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்து தங்களது ஆண்குறியை பெரிதாக்கிக் கொள்ள நினைக்கும் பல ஆண்களுக்கு அவர்களது ஆண்குறி சாதாரண அளவிலும், முழுமையான செயல்திறனுடனும் இருக்கிறது, ஆனால் அவர்கள் தங்களது ஆண்குறி சிறியதாக இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறார்கள் (இது பெனைல் டிஸ்மார்பிசம் குறைபாடு என அறியப்படுகிறது).
இது ஆண்குறி விரிவாக்க பொருட்கள் ஒரு பெரிய தொழில்துறையாக உருவாக வித்திட்டிருக்கிறது. ஆண்குறியை பெரிதாக்குவதாக கூறிக்கொண்டு ஆன்லைனில் பெரும்பாலும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாத மாத்திரைகள், சப்ளிமெண்டுகள், எண்ணெய்கள் மற்றும் கிரீம்கள் கிடைக்கின்றன. இந்த சிகிச்சைகளில் பல பெரும்பாலும் பலனற்றவையாக, அதிக செலவுள்ளவையாக மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடியவையாக உள்ளன. இதில் அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அல்லாதவை உள்ளிட்ட இரண்டு முறைகளிலும் தேர்வுகள் இருக்கின்றன.
அறுவை சிகிச்சை அல்லாத முறைகள் (Non-Surgical Methods)
மாத்திரைகள் மற்றும் களிம்புகள் (Pills and Ointments)
ஆண்குறியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு மூலிகைகள், வைட்டமின்கள், ஹார்மோன்கள் அல்லது கனிமங்கள் அடங்கிய பல மாத்திரைகள், களிம்புகள், லோசன்கள், கிரீம்கள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் ஏதும் வேலை செய்யாது. எந்த மாத்திரை அல்லது லோசனும் ஆண்குறியின் விரிவாக்கத்திற்கு காரணமாவதாக மருத்துவச் சான்றுகள் ஏதுமில்லை. இவற்றில் சில உடலுக்கு கேடு விளைவிப்பதாகவும் இருக்கக் கூடும்.
ஜெல்கிங் (Jelqing)
ஜெல்கிங் எனப்படுவது ஆண்குறியை ஈர்த்து, அதனை அடிப்பகுதியில் இருந்து நுனி வரை தொடர்ந்து மெதுவாக உருவிவிடக்கூடிய முறை ஆகும். இது உருவி விடுதல், மில்கிங் அல்லது ஆண்குறி நீட்சி எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்குறிக்குள் இரத்தத்தை துரிதமாக செலுத்தி, ஆண்குறியின் விறைப்புத் திசுவின் இரத்தம் வைத்திருக்கும் திறனை அதிகப்படுத்துவதே இந்த இழுத்துவிடுதல் பயிற்சியின் அடிப்படை ஆகும். எனினும், ஜெல்கிங்கினால் ஆண்குறியின் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் என்ற அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.
இழுவை (Traction)
ஆண்குறி இழுவை சிகிச்சை என்பது தொய்ந்த ஆண்குறியை நீளும் ஆண்குறியாக மாற்றும் வகையில் அதிகரிக்கும் இயந்திர இழுவை (துரித இழுவை) செய்யப்படும் முறை ஆகும். இந்த துரித இழுவையானது ஆண்குறியின் மீது எடைகளை பிரயோகிக்கும் வடிவமாகவோ அல்லது ஆண்குறி இழுவை சாதனம் என அழைக்கப்படும் சிறப்பு சாதனத்தைப் பயன்படுத்துவதாகவோ இருக்கலாம். இவ்வாறு எடைகளை ஆண்குறியில் தொங்கவிடுவதால் அது நீள்வதாக ஆதாரம் ஏதுமில்லை. மேலும் இதனால் ஆண்குறியில் காயம் ஏற்பட்டுவிடக்கூடும். இதில் மற்றொரு முறை ஆண்குறி இழுவை சாதனத்தைப் பயன்படுத்துவதாகும். ஆண்குறி அசாதரணமாக வளைந்திருக்கக் கூடிய நிலையான பெரோனியின் நோய் என அறியப்படும் நிலைகளில் ஆண்குறி இழுவை சாதனங்கள் பெரும்பாலும் ஆய்வுசெய்ய பயன்படுகின்றன.
இந்த ஆண்குறி இழுவை சாதனம் பிளாஸ்டிக்கால் ஆன ஆதரவு ரிங், ஒரு சிலிக்கான் பேண்ட் மற்றும் இரண்டு மாறும் தண்டுகளால் ஆனது. ஆண்குறியானது இழுவை சாதனத்தில் உள்ள தொட்டிலில் தொங்கவிடப்படுகிறது. ஒவ்வொரு சிலவாரங்களுக்குப் பிறகும், மாறும் தண்டுகள் மற்றும் தொட்டில் ஃபிரேமுக்கு சிறு உலோக நீட்டிப்பு செய்வதன் மூலம் படிப்படியாக மென்மையாக துரித இழுவை அதிகரிக்கப்படுகிறது. இந்த துரித இழுவை சாதனம் தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை (சில ஆய்வுகளில் ஆறு மாதங்கள் வரை) பயன்படுத்தப்படும். சில ஆராய்ச்சிகளில் இந்த இழுவை சாதனம் 3-4 மாதங்களுக்கு தினமும் 6 முதல் 9 மணி நேரம் வரை பொருத்தப்பட்டதில் சராசரியாக ஆண்குறி நீளம் 1.7 – 1.8 செ.மீ அதிகரித்துள்ளது. இழுவை சாதனங்கள் ஆண்குறியை நீட்டிப்பதற்கான மற்றும் குறைபாட்டை சரிசெய்வதற்கான சில சாதகமான ஆதாரங்கள் இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தும் நபர் மிகவும் தாங்கும் திறனுடையவராக இருக்க வேண்டும். இதனைப் பயன்படுத்தும் நபருக்கு மிகவும் அதிக உடன்பாடும், உறுதியும் தேவை. எனினும், அவர்கள் ஒரு அனுபவமிக்க மருத்துவரின் (சிறுநீரக சிறப்பு மருத்துவர் அல்லது நோயியல் சிறப்பு மருத்துவர்) வழிகாட்டுதலின் கீழ் இதனை பயன்படுத்த வேண்டும்.
வெற்றிட சாதனங்கள் (ஆண்குறி குழாய்கள்) (Penile pumps)
வெற்றிட விறைப்பு சாதனம் (VED) முக்கியமாக ஆண்மையின்மை (விறைப்புத் தன்மை சீர்கேடு – ED) சிகிச்சைக்காக வடிவமைக்கப்பட்டது. ஆண்குறி குழாய்கள் ஆண்குறியைச் சுற்றி நிறுவப்படும் குழாய் வடிவ சாதனமாகும். மேலும் இதனைச் சுற்றி காற்று அடித்து உந்தப்பட்டு ஒரு வெற்றிடம் உருவாகும். இந்த வெற்றிடம் ஆண்குறியினுள் இரத்தத்தை ஈர்க்கும், இது விறைப்புத்தன்மை உருவாக காரணமாகலாம். புரோஸ்டேட் புற்றுநோய்க்கான புரோஸ்டேட்டக்டமி சிகிச்சை மேற்கொள்ளும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அடைய ஒரு மறுவாழ்வு நடவடிக்கையாக இதனைப் பயன்படுத்தும் போது, இது ஆண்குறியை பாதுகாப்பதற்கு அல்லது ஆண்குறி நீளம் சற்றே அதிகரிப்பதற்கு உதவுதாக அறியப்படுகிறது. ஆண்குறிக் செயற்கை உள்பதியவைத்தல் சிகிச்சை மேற்கொள்ளும் ED ஆல் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கு இதனைப் பயன்படுத்தி ஆய்வு செய்ததில், இது அவர்களது ஆண்குறி நீளம் பராமரிக்கப்பட உதவுவதாக அறியப்படுகிறது.
மக்கள் ஆண்குறியின் நீளம் அதிகரிக்க ஒரு உடல் சிகிச்சையாக (பல மாதங்களுக்கு ஒவ்வொரு வாரமும் மூன்று முதல் நான்கு 30 நிமிடங்கள் கொண்ட அமர்வுகள்) VED -ஐ முயற்சிக்கிறார்கள். எனினும், இதனால் ஆண்குறியின் நீளம் அதிகரிப்பதற்கான எந்த மருத்துவச் சான்றுகளும் இல்லை. மேலும், ஆண்குறி குழாய்களை அதிகம் பயன்படுத்துவதால் ஆண்குறி திசு சேதமாகிவிடக்கூடும் (ஃபைப்ரோசிஸ் என அறியப்படும் வடு உருவாக்கத்திற்கு வழிவகுக்கும்), இது பலவீனமான விறைப்புத்தன்மை ஏற்பட வழிவகுத்துவிடும். இதில் வெற்றிட வரம்பி பயன்படுத்தப்படாத போது, அதன் துரித நிலை அதிகரித்து ஆண்குறியில் காயம் ஏற்பட காரணமாகிவிடும். மேலும் கடுமையான சூழல்களில், ஆண்குறி திசுவில் தீவிர காயம் ஏற்படக் கூடும்.
அறுவை சிகிச்சை முறைகள் (Surgical Methods)
ஆண்குறி நீட்டிப்பு அறுவை சிகிச்சை (Penis Lengthening Surgery)
ஆண்குறியின் பின்னால் உள்ள எலும்புடன் அதனை இணைக்கும் தசை நார் அதன் தண்டு சிறிதளவு வெளியேறும்படி வெட்டிவிடப்படுகிறது. இந்த தசை நார் வெட்டி விடப்படும் போது, ஆண்குறி கீழே தொங்கும், இதனால் அது நீண்டதாகத் தோன்றும். இந்த தசை நார் பொதுவாக விறைப்புத்தன்மை அடைந்த ஆண்குறி மேல்நோக்கி இருப்பதற்கு உதவுவதற்கு செயல்படுகிறது. எலும்பில் இருந்து இந்த தசை நார் வெட்டப்பட்ட பிறகு, ஆண்குறி விறைப்புத்தன்மையில் இருக்கும் போது சற்று கீழே இறங்கி இருக்கலாம். இந்த நடைமுறையினால் ஆண்குறியின் நீளம் சராசரியாக 1.3 செ.மீ அதிகரிக்கலாம். எனினும், இந்த அறுவை சிகிச்சையினால் ஆண்களுக்கு திருப்தி ஏற்படும் விகிதம் மிகவும் குறைவாகவே (35%) இருக்கிறது.
பிற ஆண்குறி நீட்டிப்பு முறைகள் ஆண்குறியின் வெளிப்பகுதியை நீட்டிப்பதற்காக தோல் மடிப்பை பயன்படுத்துவதை உள்ளடக்கியதாகும். மேலும், தசை நார் வெளிப்பாடு தோல் மடிப்பு நடைமுறையுடன் இணைந்து செய்யப்படும் போது 1-2 செ.மீ நீளம் அதிகரிக்கக் கூடும். வடுக்கள், கணு உருவாக்கம், கீழறங்கி தொங்கும் ஆண்குறி, தொற்று மற்றும் ஆணுறுப்பில் குறைபாடு உள்ளிட்டவை இந்த வளர்ச்சி அறுவை சிகிச்சையின் முக்கிய வரம்பெல்லையாகும்.
ஆண்குறி சுற்றளவு அதிகரிப்பு அறுவை சிகிச்சை (Penis girth increasing surgery)
இந்த அறுவை சிகிச்சை முறையில், ஆண்குறியின் தடிமன் (சுற்றளவு) அதிகரிக்கிறது. ஆண்குறியின் அடிப்பகுதியில் உள்ள தோலில் வெவ்வேறு திசுக்களை (கொழுப்பில்லாத அல்லது அடித்தோல் ஒட்டு) அல்லது மக்கும் பொருளை பொருத்துதல் இதனை அடைவதற்கான ஒரு முறை ஆகும். ஆண்குறியில் உள்ள பஞ்சு போன்ற விறைப்புத் திசுவுக்கு கூடுதல் பலமளிக்க (கேவர்னோசல் பெரிதாக்கல் நடைமுறை) உடலில் உள்ள நரம்புகளை (சேபனஸ் நரம்பு ஒட்டுக்கள் போன்றவை) பயன்படுத்துவது மற்றொரு நடைமுறை ஆகும். கொழுப்பு உட்செலுத்துதல்கள் மீண்டும் உறிஞ்சப்பட்டு சுருங்கி விடுவதால் ஏமாற்றமளிக்கும் முடிவுகளைக் கொண்டிருக்கின்றன. மேலும் இதில் கொழுப்பு உருண்டையாக பரவுவதால் கட்டிகள் ஏற்பட காரணமாகிவிடுவதுடன், ஆண்குறியின் வடிவமும் உருமாறிவிடக் கூடும். ஆண்குறியின் தோலுக்கு கீழ் மக்கும் ஃப்ரேம்களை உள்நுழைப்பதால் சிறந்த முடிவுகள் ஏற்படுகின்றன.
லிப்போசக்சன் (Liposuction)
முன்னால் நீட்டிக்கொண்டிருக்கும் தொப்பை உள்ள பருமனான ஆண்களுக்கு ஆண்குறியின் அடிப்பகுதி கொழுப்பான தோலில் புதைக்கப்பட்டதைப் போன்று தோன்றலாம். இந்த கொழுப்பை லிப்போசக்சன் முறையில் நீக்குவதம் மூலமாக ஆண்குறியானது தோலினுள் குறைவாக புதைந்திருப்பது போல் தோன்றும் மற்றும் தண்டுப்பகுதி பெருமளவு வெளியே தெரியும். ஆண்குறியானது ஒன்று அல்லது இரண்டு சென்டி மீட்டர் நீண்டிருப்பது போல் தோன்றும், எனினும் அந்த நபர் உணவு மற்றும் உடற்பயிற்சியை பராமரிக்கவில்லை எனில், அவருக்கு மீண்டும் எடை மற்றும் கொழுப்பு கூடி குறைந்த நாட்களே இந்த விளைவுகள் தோன்றலாம். லிப்போசக்சன் நடைமுறையும் அதன் அபாயங்களைக் கொண்டிருக்கிறது.
ஆண்குறி விரிவாக்க நடைமுறைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான சரியான நபர்கள் யார்? (Who are the right candidates for penis enhancement procedures and surgery?)
5 செ.மீ நீளத்திற்கும் குறைவான மிகவும் சிறிய ஆண்குறி (நுண்ணிய ஆண்குறி) கொண்ட ஆண்கள் இந்த நடைமுறைகள் பற்றிய ஆபத்துகள் மற்றும் நன்மைகளை விரிவாக தெரிந்து கொண்ட பிறகு ஆண்குறி விரிவாக்க அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
தங்களது ஆண்குறியின் அளவு குறித்து ஏக்கப்படும் மற்றும் ஆண்குறி விரிவாக்க நடைமுறைகளுக்காக அறுவை சிகிச்சை நிபுணரை சந்திக்கும் பெரும்பாலான ஆண்கள் அவர்களது ஆண்குறியின் புற அமைப்பு குறித்து பயந்தவர்களாகவும், அவர்களது சாதாரண அளவில் உள்ள ஆண்குறி குறித்த தேவையற்ற கவலை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அத்தகைய ஆண்களுக்கு முதலில் எந்த நடைமுறையும் செய்யப்படுவதற்கு முன் அத்தகைய மனநிலையில் இருந்து வெளிவர ஆலோசனை தரப்படுகிறது. இத்தகைய அதிகரித்தல் நடைமுறைகள் எப்போதும் வெற்றிகரமாக இருப்பதில்லை, அறுவை சிகிச்சைக்குப் பிறகு திருப்தி ஏற்படுதல் பொதுவாக மோசமாக இருக்கிறது மற்றும் தொற்று, வடு உருவாக்கம், முடிச்சு உருவாக்கம், முரண்பாடான ஆண்குறி குறுக்கம், உட்செலுத்தப்படும் பொருள் இடம்பெயர்வு மற்றும் பாலியல் பிறழ்ச்சி போன்ற சிக்கல்கள் பொதுவாக ஏற்படும் முதலியவை அவர்களுக்கு விளக்கி புரிந்துகொள்ள வைக்கப்படுகிறது. இந்த மனநிலையில் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கு முறையான ஆலோசனை வழங்குவதால் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நினைப்பு குறைந்துவிடலாம்.
சுருக்கமாக, ஆண்குறி விரிவாக்க அறுவை சிகிச்சையினால் 1-2 செ.மீ நீளமும், 1-2.5 செ.மீ சுற்றளவும் அதிகரிக்கக் கூடும். ஆனால் இந்த நடைமுறைகள் தேவையற்ற சிக்கல்களை விளைவிக்கும் ஆபத்தையும், ஏமாற்றமளிக்கும் திருப்திகர விகிதத்தையும் கொண்டதாக இருக்கின்றன. ஆண்குறி விரிவாக்கத்திற்கான காஸ்மெடிக் அறுவை சிகிச்சைகள் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன. பெரும்பாலான இந்த நடைமுறைகள் இன்னும் ஆய்வுக்குட்பட்டவையாகவே இருக்கின்றன. மேலும் மற்ற எந்த குறைந்தபட்ச அளவீடுகளும் தோல்வியடைந்த பிறகு இறுதியாக உண்மையிலேயே மிகவும் சிறிய ஆண்குறி கொண்டுள்ள ஆண்களுக்கு மட்டுமே இவை பரிந்துரைக்கப்படுகின்றன
நரம்புகள் பலம் குறைந்து தளர்ச்சி அடைந்து இல்லற வாழ்வில் ஓர் ஆணால் முழு இன்பம் அடைய முடியாமையையே ஆண்மைக்குறைவு என்கிறோம். இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
மனஅழுத்தம் அதிகமாக இருந்தாலும்கூட நரம்புது் தளர்ச்சி உண்டாகும். நோய்வாய்ப்பட்டதாலோ விபத்தாலோ தண்டுவடத்தில் அடிபட்டால்கூட நரம்புத் தளர்ச்சி உண்டாகி, ஆண்மைக்குறைபாடு ஏற்படும்.
குடி, போதைப் பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தாலும் ஆண்மைக்குறைபாடு ஏற்படும்.
விஷக் காய்ச்சல் அல்லது அம்மை போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு அதனால் சில பக்க விளைவாகவும் நரம்புத் தளச்சி ஏற்படலாம்.
நரம்புத் தளர்ச்சிக்கென சில அறிகுறிகள் இருக்கின்றன. கீழ்வரும் சில அறிகுறிகள் ஆண்மைக்குறைபாட்டை பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.
தாம்பத்திய உறவின்போது ஆணுறுப்பு விரைவில் துவண்டு விடுதல். விறைப்பு இருந்த போதிலும் விந்து வெளியேறி விடுவது.
விந்து வெளியேறாமலேயே இருப்பது.
இந்த அறிகுறிகள் எல்லாம் நரம்புத் தளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள். ஆனாலும் இதை மருத்துவ ரீதியாக சரி செய்ய முடியும். இதுவொரு குறைபாடுதான். நோய் அல்ல. ஆகவே, இதனை எளிய மூலிகை மருந்துகள் மூலம் சரி செய்ய முடியும்.
ஊட்டச்சத்துக்கள் மிக்க உணவுகள், பாதாம், வால்நட் போன்ற பருப்பு வகைகள் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆண்மைக்குறைபாடு நீங்கி, விந்தணு வீரியம் பெறும்.
கர்ப்பம் என்பது ஒரு சுகமான தூய்மையான அனுபவம். இந்தக் கர்ப்ப காலத்தில் பெண்களிலே பல உளவியல் மற்றும் உடலியல் மாற்றங்களை ஏற்படுகின்றன. முதல் கர்ப்பம் என்றால் இந்த திடீர் மாற்றங்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்பது யதார்த்தம், அந்த சந்தேகங்கலிலே ஒன்றுதான், கர்ப்ப காலத்திலேயே உடலுறவு கொள்ளலாமா வேண்டாமா என்பது.
மருத்துவ ரீதியாக கர்ப்ப காலத்தின் போது நடைபெறுகிற உடலுறவுகளால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டு விடாது என்றே சொல்லப்படுகிறது. குழந்தையானது கர்ப்பப் பையினுள்ளே அம்னிஒட்டிக்(amniotic fluid) எனப்படும் திரவத்தால் சூழப்பட்டே இருக்கிறது.குழந்தையை சூழ உள்ள இந்த திரவமானது குழந்தைக்கு உடலுறவின் போது ஏற்படும் அமுக்க அசைவுகளில் இருந்து போதிய பாதுகாப்பைக் கொடுக்கிறது.
கர்ப்ப காலத்தில் அநேகமான பெண்களுக்கு உடலுறவு மீதான ஆர்வம் அதிகரிக்கிறது என்றே நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறான பெண்கள் எந்த அச்சமும் இல்லாமல் கர்ப்ப காலம் முழுவதும் உடலுறவு கொள்ளலாம்.
எப்படிப் பட்டவர்கள் கர்ப்பத்தின் போது உடலுறவைத் தவிக்க வேண்டும்?
கர்ப்ப காலத்தில் உங்களுக்கு பிறப்பு வழியில் ரத்தப் போக்கு இருந்தால் , அல்லது உடலுறவின் போது ரத்தம் போகுமானால் உடலுறவைத்தவீர்த்து வைத்திய ஆலோசனை பெறுவது நல்லது. இவ்வாறானவர்களுக்கு பிளசென்டா பிரீவியா(placenta previa) என்கின்ற நோய் நோய் இருக்கலாம் , அதாவது நச்சுக் கொடியானது வழமையாக இருக்கின்ற கர்ப்பப் பையின் மேல் பகுதியில் இல்லாமல் அடிப்பகுதியில் இருக்கலாம் , இது உடலுறவின் போது காயப்படுத்தப் படலாம். ஆகவே கர்ப்ப காலத்தில் இரத்தம் போகிறவர்கள் உடனடியாக உடலுறவைத்தவீர்த்து , வைத்தியரை நாடி தனக்கு அந்த நோய் இல்லை என்பதை உறுதி செய்த பின்பு உடலுறவு கொள்ளலாம்.
மேலும் கர்ப்ப காலத்தில் பால் சுரப்புத் தொடங்கி விடுவதால் , பாலால் நிரம்பிய மார்பகங்கள் சில பெண்களுக்கு வலியைக் கொடுக்கலாம். மற்றும் உடலுறவின் போது ஏற்படுகின்ற தீண்டல்களால் பால் சுரப்பு ஏற்படலாம் ஆனாலும் இது எந்த விதத்திலும் தீங்கு விளைவிப்பதில்லை.
மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடற் பருமன் மாற்றத்தால் வழமையான நிலைகளில் இருந்து சற்று வேறுபட்ட நிலைகளில் உடலுறவு கொள்ள வேண்டிய தேவையும் ஏற்படலாம். அதெல்லாம் தம்பதியினரின் தனிப்பட்ட விடயம் நீங்களே பார்த்துக்கொள்ளுங்ககள். சுகமான கர்ப்பத்தில் சுகமான உடலுறவு சுகமானதே.
சர்க்கரைவள்ளிக் கிழங்கை தங்களது அன்றாட டயட்டில் சேர்க்கும் பகுதிகளில் வாழும் தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எப்படியெனில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பெண்களின் கருவளத்தை அதிகரித்து, ஓவுலேசன் நிகழ்வை மேம்படுத்தி, இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.
* இதுவரை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்களின் வயது 30-திற்கு மேல் தான் உள்ளது. இதற்கு காரணம் 30 வயதிற்கு மேல் பெண்கள் இறுதி மாதவிடாயை நெருங்கிக் கொண்டிருப்பால், ஒவ்வொரு மாதமும் கருப்பையில் இருந்து ஒன்றிற்கு மேற்பட்ட முதிர்ச்சியடைந்த கருமுட்டைகள் வெளியிடப்படுகின்றன. இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடும் போது அக்கருமுட்டைகளில் விந்தணுக்கள் நுழைந்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவுகின்றன.
* இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்ப்பமாக முயலும் போது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இந்த ஃபோலிக் அமிலம், பருப்பு வகைகள், நட்ஸ், பட்டாணி, அவகேடோ அல்லது வெண்ணெய் பழம், பசலைக்கீரை, வெண்டைக்காய், சிட்ரஸ் பழங்களில் அமிலம் இருக்கும்.
* உயரத்திற்கு ஏற்ற எடை சில ஆய்வாளர்கள், ஒரு பெண் தான் கருத்தரிக்கும் போது, தன் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் நன்கு ஆரோக்கியமாக இருந்தால், இரட்டைக் குழந்தைகள் பிறக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
* இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைக்கும் ஆண்கள், ஜிங்க் சத்து நிறைந்த உணவுப் பொருட்களான கடல் சிப்பி, பச்சை இலைக் காய்கறிள், விதைகள் மற்றும் பிரட் போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், விந்தணுக்களின் உற்பத்தி அதிகரித்து, பெண்களின் உடலினுள் செல்லும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட விந்தணுக்கள் நீந்தி கருமுட்டையை அடையும். இதனால் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
* ஒன்று அல்லது இரண்டு பிரசவத்தை சந்தித்த பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே இரட்டை குழந்தை வேண்டுமென நினைக்கும் தம்பதிகள் முதல் குழந்தைக்கு பின் முயற்சியுங்கள்.
* முக்கியமாக தம்பதிகளின் குடும்பத்தில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்து, அத்தம்பதிகள் இரட்டை குழந்தைக்கு முயற்சித்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
* குட்டையான பெண்களை விட, உயரமான பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது. அதுவும் 5 அடி 6 அங்குலம் கொண்ட பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம்.
ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் கிடைக்கும் மகிழ்ச்சியான நேரத்தில், அதை மேலும் இன்பமாகக் கொண்டாடவே மனம் விரும்பும். இது மனித இயல்பு, இந்த நிலையில், எண்ணெய் தேய்த்து குளித்த அன்று தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாமா? அல்லது கூடாதா? எனப் பலருக்கும் பெரும் சந்தேகம் உள்ளது. ஒவ்வொரு மனிதருக்கும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
அதுவும் நல்லெண்ணெய் தேய்து குளிப்பது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். தலைக்கு மட்டும் இன்றி உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். சனி மற்றும் புதன் ஆகிய இரு கிழமைகளில் ஆண்கள் நல்லெண்ணெய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். அது போல், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். குறிப்பாக, காலை 5 மணி முதல் 7 மணி வரை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான் சிறந்தது. உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து 15 நிமிடம் வைத்து இருந்து பிறகு குளிக்க வேண்டும். ரொம்ப நேரம் தேய்த்து வைத்திருக்கக் கூடாது. ஞாயிற்றுக்கிழமை உள்பட மற்ற நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது கூடாது.
எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு, நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். உடனே சென்று தூங்க கூடாது, குளிர்சியான பழங்கள், மோர், தயிர், பால், ஜூஸ், ஐஸ் க்ரீம் போன்ற குளிர்ச்சி தரும் பொருட்களும் கட்டாயம் சாப்பிடக் கூடாது. அதிலும், ஆண் எண்ணெய் தேய்த்துக் குளித்த நாட்களில் குறிப்பாகக் கணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவை (Sex) வைத்துக் கொள்ளவே கூடாது என்றும், மற்ற நாட்களில் விருப்பம் போல உறவு வைத்துக் கொள்ளலாம் என்றும் ஒரு கருத்து தமிழகத்தில் உள்ளது.
இது தவறான கருத்து. மகிழ்ச்சியான மனநிலையில் உள்ள தம்பதிகள் தாம்பத்திய உறவை எப்போதும் தள்ளிப் போடக் கூடாது. அதன் மூலம் கிடைக்கும் இன்பமும் ஏதாவது ஒரு காரணத்தினால், தள்ளிப் போனால், அவர்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாவதுடன் மன அழுத்தம் ஏற்படும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கும், தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வதற்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்று மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே, எப்போது மனம் விரும்புகின்றதோ, அப்போது, காலச் சூழ்நிலை ஏற்ப, உடல் ஒத்துழைப்புக்கு ஏற்ப அப்போது மகிழ்ச்சியோடு இன்ப விளையாட்டை துவக்கலாம்.
ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தால்?… சொல்லவா வேண்டும்
அதிகாலைப் பொழுதில் உடலுறவில் ஈடுபடுவது தனி சுகம் என்று கூறுகிறார்கள். அது உடலுக்கும் மனதுக்கும் அதிக புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் தரும் என்று கூறப்படுகிறது. அத்தகைய காலை நேர உடலுறவில் அதிக இன்பம் பெற என்ன செய்யலாம்?
கட்டிலில் எழுந்திருக்கும் முன்பாகவே படுத்துக் கொண்டே, தன்னுடைய துணையை கட்டியணைக்க வேண்டும். வேலை இருக்கிறது என்று பெண்கள் செல்லமாகக் கொஞ்சிக் கொண்டே எழுந்து போனாலும் அந்த வேலையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி, இழுத்து அணைக்க வேண்டும்.
இழுத்து அணைத்து கொஞ்ச ஆரம்பித்ததும் பெண்கள் உங்கள் வழிக்கு வந்துவிடுவார்கள். அதன்பின், அவர்களுடைய மார்பகங்களையும் அந்தரங்க உறுப்புகளையும் தொட்டுத் தீண்ட வேண்டும்.
பெண்ணின் அந்தரங்க உறுப்புகளைப் பற்றியும் அவர்களைப் பற்றியும் புகழ்ந்து பேசலாம்.
உங்களுடைய விரல்களை வைத்து உடல் முழுக்க தீண்டி விளையாடி, பின் பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிற கிளிட்டோரஸைத் தீண்ட வேண்டும்.
அதிகாலைப் பொழுதில் உறவு கொள்ளும் போது, நாய் போன்ற பின்புற பொசிசனில் உறவில் ஈடுபடுவது இன்னும் கூடுதல் இன்பத்தையும் கிளர்ச்சியையும் தரும்.
ஆண்களுக்கு உள்ள சில முக்கியமான பிரச்னைகளில் விந்தணுக்கள் உற்பத்தி, விந்து நீர்த்துப்போதல், வேகமாக விந்து வெளியுறுதல் போன்ற பிரச்னைகள் அதிகமாக உள்ளள. அவற்றை சரிசெய்ய தங்களால் முடிந்த கைவைத்தியத்தை செய்து பார்க்கிறார்கள்.
ஆனால் சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்ல கூச்சப்பட்டு அப்படியே விட்டுவிடுகிறார்கள். ஆனால் நம்முடைய முன்னோர்கள் இதுபோன்ற பிரச்னைகள் ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக பல குழந்தைகளைப் பெற்று இன்பமாக இருந்திருக்கிறார்கள்.
சில எளிய மூலிகைகளை சாப்பிடுவதால் இதுபோன்ற பிரச்னைகளை சரிசெய்ய முடியும்.
வால்மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா ஆகிய நான்கையும் சமஅளவு எடுத்து அரைத்து நெய் சேர்த்து வேகவைத்து தினமும் காலையும் மாலையும் இருவேளை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும்.
முருங்கைப்பூவை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் சேர்த்துக் குடித்தால் விந்து நீர்த்துப் போகாது.
பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, நெய், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து துவையல் போல செய்து அடிக்கடி உணவில் சேர்து்துக் கொண்டாலும் தாதுக்கள் விரித்தியடையும். விந்து கெட்டிப்படும்.
கர்ப்பகாலம், பிரசவ காலம் மற்றும் வயது முதிர்வு காலங்களில் பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபாடில்லாமல் இருப்பார்கள். ஆனால், எந்த காரணமும் இல்லாமல் சில பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபாடில்லாமல் இருப்பார்கள்.
உடலுறவின் போது வலி
பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாதல்
உடலுறவில் நாட்டம் இல்லாமல் போதல்.
பெண் குறைபாடுகளுக்கு மனரீதியான காரணங்கள்
அறியாமை, உடலுறவு என்றாலே தவறான ஒன்று என்கிற கருத்து மனதில் ஆழமாக பதிந்திருத்தல்
பரபரப்பு, மனச்சோர்வு
கணவரைப் பிடிக்காமல் போதல், சண்டை, சச்சரவு
குழந்தை உருவாகிவிடுமோ என்ற பயம்
வளரிளம் பருவத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள். உறவினர்களால் அல்லது தெரியாதவர்களால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியிருத்தல்
பொதுவாக பாலியல் கோளாறுகளுக்கு, குறிப்பாக மனக்கோளாறுகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது முழுமையான பயனை அளிக்கும்.
அதேபோல் யோகாவும் பாலியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். யோகா பாலியல் உணர்வுகளையும் செயல்திறனையும் எந்த விதத்திலும் பாதிக்காது. மாறாக உடல் குறைபாடுகளையும், மனதின் எதிர்மறை எண்ணங்களையும் போக்கி, பாலியல் உறவை முழுமையாக அனுபவிக்க உதவும்.
யோகா ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் போதிப்பதால், சுறுசுறுப்பு ஏற்பட்டு சோம்பேறித்தனம் அகலும். நரம்புகள் வலிவடையும். பதற்றம், மன அழுத்தம் குறையும்
நீங்கள் என்னதான் உங்கள் மனைவி மீது அன்பு, அக்கறை வைத்திருந்தாலும் கூட, கர்ப்பமாக இருக்கும் போது கொஞ்சம் அதிக அன்பையும், அக்கறையையும் செலுத்த வேண்டும்.
ஏனெனில், அவரது வயிற்றில் வளர்வது உங்கள் கரு. கர்ப்பமான பிறகு பெண்கள் மனதில் அதிகரிக்கும் சந்தோசத்தை விட அதிகமாக அச்சமும் இருக்கும்.
கர்ப்ப காலம் கரு ஆரோக்கியமாக வளருமா, எந்த பிரச்சனையும் வந்துவிட கூடாது என மனதில் ஒரு குழப்பம் இருந்துக் கொண்டே இருக்கும்.
வெளியே… வேலைக்கு பெண்ணாகவே இருந்தாலும் கூட, கர்ப்பம் அடைந்த பிறகு சில மாதங்களுக்கு பிறகு வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, நீங்கள் ஃப்ரீயாக இருக்கும் போதுமட்டும் இல்லாமல், அவரை இலகுவாக உணர செய்ய, எங்கேனும் அழைத்து செல்லுங்கள்.
ஷாப்பிங்! இருவரும் சேர்ந்து ஒன்றாக பிறக்கவிருக்கும் குழந்தைக்கு தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்து வர சென்று வரலாம். இது அழகான தருணமாக மட்டுமில்லாமல், நீங்காத நினைவாகவும் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்…
நேரம்… அவருடன் தனிமையில், அமைதியான பொழுதில் நேரம் செலவழிக்க மறக்க வேண்டாம். அவர் மனதும், உடலும் இலகுவாக உணர உடன் இருந்து உதவுங்கள். உங்கள் உயிரை சுமந்துக் கொண்டிருக்கும் அவரை அழகாக உணர செய்யுங்கள். பிரசவம் குறித்த அச்சம் இருக்கும், அதை போக்கி, ஊக்கமளியுங்கள்.
காத்தாட… பிரசவ நேரத்தில் அவர்கள் சோர்வாக தான் உணர்வார்கள். அதை ப போக்க தினமும் காலை, மாலை வாக்கிங் சென்றுவர கூறுவார்கள். அவர்களை வாக்கிங் சென்றுவா என அனுப்பாமல், உடன் நீங்களும் சென்று வாருங்கள். இதனால் அவரும் வலிமையாக இருப்பார்கள், உங்கள் உறவும் ஆரோக்கியமாக இருக்கும்.
பழக்கம்! ஒருவேளை உங்களுக்கு குடி, புகை இருந்தால், குறைந்தபட்சம் அவர் கர்ப்பமாக இருக்கும் காலத்திலாவது நிறுத்திக் கொள்ளலாம். இது அவர் மனம் நிம்மதியாக இருக்க செய்யும். தேவையற்ற மனவேதனை அளிக்காது.
ஆரோக்கியம்! கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமணா டயட் முக்கியம். அவர் என்ன உணவு உண்கிறார், எதை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும், எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.
பேசுங்க… கருவில் வளரும் குழந்தையுடன் பேசுங்க. வயிற்றை தடவி கொண்டுங்கள்., முதல் முதையை முகத்தை வைத்தும் உணரலாம், வளரும் போதே முத்தங்கள் இட்டு உங்கள் அன்பை செலுத்தலாம்.
தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, சில விஷயங்களை செய்துவிட்டோமா என சரிபாாத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு, அடுத்த நாள் வேலைகளைப் பற்றி யோசித்துக் கொண்டே தூங்கச் செல்லலாம்.
தினமும் தூங்கச் செல்லும் முன்பாக, முகத்தில் உள்ள மேக்கப்பை நிச்சயம் கலைத்துவிட்டுத் தான் தூங்க வேண்டும்.
அதேபோல் நீங்கள் கான்டக்ட் லென்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால், அதை இரவில் கட்டாயம் நீக்கிவிட்டு, கண்களைக் கழுவி விட்டு தான் தூங்க வேண்டும். நீண்ட நேரங்களுக்கு லென்ஸ் அணிந்திருத்தல் கூடாது.
இந்தியர்களாக இருந்தால், தங்கத் தோடு, மூக்குத்தி, மோதிரம், தங்க செயின்கள், வளையல் ஆகியவற்றை அணிந்திருப்பார்கள். அவற்றைத் தூங்கச் செல்வதற்கு முன்பாக கழட்டி வைத்துவிடுவது நல்லது. சின்ன அணிகலனாக இருந்தாலும் சில சமயங்களில் எங்காவது குத்தி, பெரும் ஆபத்தைக் கூட விளைவிக்கும்.
தூங்கும் போது மேக்கப்பை கலைத்துவிட்டாலும், தலை அலங்காரங்களைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. ஆனால் கட்டாயம் தூங்கச் செல்லும்போது, தலையில் உள்ள ஹேர் -பின் ஆகியவற்றை எடுத்துவிட்டுத்தான் தூங்கச் செல்ல வேண்டும். இல்லையென்றால் அவை தலையில் எங்காவது குத்திவிடும்.
பெரும்பாலான பெண்கள் தூங்கச் செல்லும் முன் உடை மாற்றிவிடுகிறார்கள். ஆனால் தங்களுடைய உள்ளாடைகளைப் பற்றிக் கண்டு கொள்வதே கிடையாது. ஆனால் அது முற்றிலும் தவறான விஷயம். தூங்கச் செல்லும்போது, இறுக்கமான உடைகளை அணிந்திருத்தல் கூடாது. உள்ளாடைகளை நீக்கிவிட்டு தூங்கச் செல்வது சிறந்தது.
பொதுவாக முப்பத்தைந்து மற்றும் நாற்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்திருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இங்கு மனைவிக்கு உடலுறவில் விருப்பம் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?...
அடிக்கடி தலைவலி, வயிற்றுவலி போன்ற வெளியே தெரியாத காரணங்கள் சொல்லி தவிர்க்க பார்ப்பார்கள்.
தூக்கம் வருகிறது, சோர்வாக இருக்கிறது, குழந்தைகள் தூங்கவில்லை, காலை அலுவலகம் செல்ல வேண்டும் என்றெல்லாம் காரணம் சொல்வார்கள்.
குடும்ப கட்டுப்பாடு செய்தவர்களாகவே இருந்தாலும், ஆணுறை அணிய செய்து உடலுறவு கொள்ள சொல்வார்கள்.
அந்தரங்க உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்று கூறுபவர்களும் உண்டு.
நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்று சொல்ல தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவரின் வெறுப்புக்கு ஆளாகிவிடுவோமா என்கிற பய உணர்வு இருக்கும். மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால், கணவருக்கு அளவிற்கு அதிகமாக கோபம் ஏற்படும். மனைவியை எல்லையின்றி நேசிக்கும் கணவரும் கூட, மனைவி இதற்கு மறுப்பு தெரிவித்தால் கட்டுக்கடங்காத கோபத்தை காட்டுவார்கள். ஏன் எதற்காக மறுக்கிறாள் என்பதை பொறுமையாக யோசிக்க மாட்டார்கள். அந்த தருணத்தில் உடலுறவை பற்றிய உந்துதல் மட்டுமே இருக்கும்.
அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால், காரணமில்லாமல் எரிந்து விழுவது, திட்டுவது அவர்களை நிராகரிப்பது போன்றவற்றை செய்வார்கள். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், மனைவியின் நடத்தையை சந்தேகிப்பார்கள். இதனால் கணவன் மீது இருக்கும் அன்பும், அந்நியோன்னியமும் குறையுமே தவிர அவர்களிடம் கட்டாயம் மாற்றத்தை காண முடியாது. சந்தேகம் என்பது உங்கள் குடும்பத்தையே அழித்து குழந்தைகளின் வாழ்வை கேள்விக் குறியாக்கிவிடும்.
இது போன்ற விஷயங்களை பொறுமையாகவும், அமைதியாகவும் கையாள்வதே நன்மையை தரும். உடலுறவு கொள்ளும் போது ஆண்களை விட பெண்களுக்கே அதிக இன்பம் கிடைக்கும். உடலுறவினால் அவர்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண்களே அதிகம் விரும்புவார்கள். எனவே, பெண்கள் ஏன், எதனால் தவிர்க்கிறார்கள் என்பதை அறிய வேண்டியது கணவரின் கடமை. இதுவே, சிறந்த இல்லற வாழ்விற்கு வழிவகுக்கும்.
ரத்த கசிவு ஏற்பட்டால் கன்னித் தன்மையோடு இருக்கிறாள் என்றும், ரத்த கசிவு ஏற்படவில்லை என்றால் அவளது கன்னித்தன்மை கேள்விக்குறியாகிறது. ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்பதை முதல்முறையாக உடலுறவில் ஈடுபடுவதைக் கொண்டு கூற முடியாது என்பது தான் ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
மேலும் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். அந்த காலத்தில் பெண்கள் வயதிற்கு வந்தால் அவர்களை வீட்டினுள் முடக்கி வைத்திருப்பார்கள். மிக விரைவிலேயே திருமணம் செய்து விடுவார்கள். அதன்பின் பெண்களால் ஓடவோ, ஆடவோ முடியாது. அதனால் அவர்கள் முதல்முறை உறவில் ஈடுபடும்போது கன்னித்திரை கிழிந்து ரத்தக்கசிவு ஏற்படலாம். அவர்களுக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கலாம்.
ஆனால் இக்காலத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும், ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று காட்டி வருகிறார்கள். குறிப்பாக விளையாட்டு துறைகளிலும் பெண்கள் அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள்.
பெண்கள் பிறக்கும் போது பிறப்புறுப்பின் நுழைவாயிலில், ஹைமன் எனப்படும் மென்மையான படலம் போன்ற கன்னித்திரை சவ்வு ஒன்று இருக்கும். இந்த கன்னிச்சவ்வானது பெண் முதன்முதலில் உடலுறவு கொள்ளும் போது கிழிந்து, ரத்தக்கசிவு ஏற்படும். இது உடலுறவினால் மட்டும் தான் கிழியும் என்று பொருள் கொள்ள கூடாது.
பெண்களின் கன்னித்தன்மை கன்னிச்சவ்வில் இல்லை. கன்னிச்சவ்வானது சில பெண்களுக்கு சற்று கடினமாகவும், சிலருக்கு மெல்லியதாகவும் இருக்கும். ஆனால் இன்னும் சில பெண்கள் இந்த கன்னிச்சவ்வு இல்லாமலேயே பிறப்பார்கள். எனவே ஓர் பெண்ணின் கன்னித்தன்மையை முதல்முறை உடலுறவில் ஈடுபடும் போது கண்டுபிடிக்க முடியாது. கன்னிச்சவ்வை கொண்டு கன்னித் தன்மையை பரிசோதிப்பது என்பது தவறான ஒன்று.
கன்னிச்சவ்வு என்பது மிகவும் மெல்லிய திசு. இது எளிதில் கிழியக்கூடியது மற்றும் எந்நேரத்தில் வேண்டுமானாலும், இது கிழியலாம். அதிலும் பெண் ஓட்டம், சைக்கிளிங், நீச்சல் அல்லது வேறு ஏதேனும் விளையாட்டில் ஈடுபடுபவராயின், அவர்களுக்கு கன்னிச்சவ்வு நிச்சயம் உடலுறவுக்கு முன்பாகவே கிழிந்திருக்கும். இதை வைத்து அவர்களை சந்தேகிப்பது தவறு.
பெண்கள் சுய இன்பம் காணுதல் அல்லது மாதவிலக்கு காலத்தில் வலியைக் குறைக்க மாத்திரைகளைப் பயன்படுத்துதல் போன்ற காரணத்தினாலும், கன்னிச்சவ்வு கிழிந்திருக்கும். இதைவைத்தும் அவர்களை தவறாக எண்ணுவது முட்டாள் தனமான ஒன்று.
முதல்முறை உடலுறவில் ஈடுபடும் போது இரத்தக்கசிவு ஏற்படுகிறதோ இல்லையோ, கட்டாயம் கடுமையான வலியை உணர்வார்கள். இதற்கு அவ்விடத்தில் லூப்ரிக்கேசன் பற்றாக்குறை மட்டுமின்றி, சில பெண்கள் முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது பயப்படுவார்கள். இப்படி பயமடையும் போது, பிறப்புறுப்பு இறுக்கமடைந்து, லூப்ரிக்கேசன் குறைந்து வலி ஏற்படும்.