நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள திரைப்படம் மெர்சல். தீபாவளி திருநாளன இன்று இந்த படம் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யின் 61ஆவது படம், அவர் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் முதல் படம், ‘பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற தெறி’ படத்துக்குப் பின் இயக்குனர் அட்லியுடன் இணைந்திருக்கும் இரண்டாவது படம். ஏ.ஆர்.ரகுமான் இசையில் மூன்றாவது படம் என பல காரணங்களால் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் ‘மெர்சல்’ வெளியாவதற்கு முன்பாகவே பல சாதனைகளைப் படைத்துவிட்டது. படம் எப்படி இருக்கிறது என்பதையும் வெளியான பின் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இந்நிலையில், படத்தின் முதல் 16 நமிட காட்சிகள் இணையத்தில் திருட்டுதனமாக வெளியிடப்பட்டுள்ளன. இது படக்குழுவினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹீரோயின்களில் போல்டானவர் என்று ஒருசிலரை சொல்லலாம். அவர்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார் சமந்தா. நாக சைதன்யாவை திருமணம் செய்த கையோடு தனது பெயருடன் ‘அக்கினேனி’ என்ற வார்த்தையை இணைத்திருக்கிறார். இது நாக சைதன்யா வின் குடும்ப பெயராகும்.
முன்னதாக திருமண நெருக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படங் களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த சமந்தா தற்போது மற்றொரு ஷாக் தந்திருக்கிறார்.
என் வயது 32. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூர் தான். என் பெற்றோருக்கு நான் இரண்டாவது மகள். எல்லாரையும் போல நானும் எனது தந்தையை ஹீரோவாக பாவித்து வளர்ந்த பெண் தான். என் வாழ்க்கை மிகவும் வண்ணமையாக திகழ்ந்துக் கொண்டிருந்தது.
எனக்கு சிறந்த தோழமைகள் அமைந்திருந்தன. அவர்களுடன் என் வாழ்வில் எல்லா விஷயங்களையும், இரகசியங்களையும் நான் பகிர்ந்துக் கொள்ளும் தைரியமும், நம்பிக்கையும் இருந்தது. பல சமயங்களில் மற்றவரின் இரகசியங்களையும் கேலி, கிண்டல் செய்து விளையாடியது உண்டு. தினமும் எங்கள் உணவிற்கும், படிப்பு செலவுக்கும் பணம் ஈட்ட எனது தந்தை மிகவும் கடினமாக உழைத்தார், சில சமயங்களில் கடன் வாங்கினார். என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வாங்கி தருவார். என் தாய், இந்த உலகில் சிறந்தவர் என கூறுவேன். என் தந்தையின் வருமானத்திற்கு ஏற்ப வாழ்க்கை நடத்த தனது ஒட்டுமொத்த வாழ்வியலையும் மாற்றி அமைத்துக் கொண்டவர் எனது தாய். நிறைய தியாகங்கள் செய்துள்ளார். ஆயினும், நாம் எனது குழந்தை பருவத்தை மிக இனிமையாகவே கழித்தேன்.
மதில் மேல் பூனை! நான் பள்ளியில் டாப்பர் கிடையாது. ஹோம் வர்க்கும் சரியாக செய்யமாட்டேன். நீ ஒரு மதில் மேல் பூனை வகையிரா என எனது ஆசிரியர் அடிக்கடி கூறி கொண்டே இருப்பார். நான் பாஸ் ஆவேனா, பெயில் ஆவேனா என எனக்கே தெரியாது. எப்படியோ எனது பள்ளி பருவத்தை ஒரு வருடம் கூட வீணடிக்காமல் தேர்ச்சி பெற்றுவிட்டேன். பிறகு பி.யூசி-யில் சேர்ந்தேன். அங்கே எனக்கு நான்கு தேவதைகள் தோழிகளாக கிடைத்தனர். பள்ளி காலத்தைவிடவும் மிகவும் இரம்மியமான, எழில்மிகு காலத்தை நான் கல்லூரியில் வாழ்ந்தேன். நிறைய கனவுகள், கிரஷ் என எல்லா பெண்களையும் போல கனவுலகில் மிதந்தேன்.
மிஸ்டர். ஹேண்ட்சம்! என் கிரஷ்ஷாக திகழ்ந்த ஆண் அவன். மிகவும் ஹேண்ட்சம். அவனை நினைக்கும் போதெல்லாம் எனது முகத்தில் ஒரு பூப்பூக்கும். அவனை பற்றி பேசும்போதெல்லாம் மனம் பூஞ்சோலையாக மாறும். ஆனால், நான் அவனுடன் பேசியதே இல்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், நான் அவனை விரும்புகிறேன் என அவனுக்கு தெரியுமா? தெரியாதா? என்று கூட எனக்கு தெரியாது. ஒரு நாள் அவன் திருமணமானவன் என அறிந்த போது என் இதயம் நொறுங்கி போனது. அதன் பிறகு யாரையும் திருமணம் செய்துக் கொள்ள கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். அப்போது தான் அவன் என் வாழ்வில் நுழைந்தான்.
அவன்… நான் இரண்டாம் வருடம் கல்லூரி பயின்று கொண்டிருக்கும் போது என்னிடம் அவன் நேரடியாக பிரபோஸ் செய்தான். அவன் வேறு கல்லூரியை சேர்ந்தவன், என்னை விட இரண்டு வயது மூத்தவன். என்னை லூசுத்தனமாக காதலித்தான் என்று தான் கூற வேண்டும். அவன் முதல் முறை பிரபோஸ் செய்த போது நான் ஏற்கவில்லை. என் மனம் அந்த திருமணமான கிரஷ் மீதே அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஆகையால், அவனை நான் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவன் என்னை பின்தொடரும் போது எரிச்சலாக வரும். இரண்டு வருடங்கள் என்னை மிகவும் தொல்லை செய்தான். நான் அவனை ஏற்கவே இல்லை. ஒரு நாள் வந்தது. அவனிடம் ஆம் நான் உன்னை காதலிக்கிறேன் என கூறினேன். அவன் மிகவம் மகிழ்ந்தான். அவனால், நான் அவனது காதலை ஏற்றுக் கொண்டேன் என்பதை நம்பவே முடியவில்லை. அந்நாள் நள்ளிரவு வரை குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டே இருந்தான், அதன் பின் நாங்கள் எல்லா நாட்களும் சந்தித்து பேச துவங்கினோம். மிகவும் நெருக்கமாக உறவில் இணைந்தோம்.
இதயம் வெடித்தது… நான் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தேன். எல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருந்தது. அப்போது தான் முதல் முறை இதயம் வெடித்து சுக்குநூறாவதை உணர்ந்தேன். நான் எனது ஈ-மெயில் செக் செய்துக் கொண்டிருந்தேன். அதில், ஒரு மெயில்… அவனுக்கு அந்த பெண் பிரபோஸ் செய்திருந்தது போல. ஆனால், நான் அறிவேன் என்னை அவன் ஒருபோதேம் ஏமாற்றியது இல்லை என. ஆனால், ஒருவேளை நான் அவனது காதலை ஏற்கவில்லை எனில், அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள அவன் முடிவு செய்திருந்ததை அப்போது தான் அறிந்தேன். அப்போது தான், நான் ஒரு சாயிஸாக இருந்ததை உணர்ந்தேன்
சண்டை! எனக்கும், அவனுக்கும் இடையே சண்டை வந்தது. அவன் என்னை சமாதானம் செய்ய மிகவும் முயற்சித்தான். அந்த பெண்ணுடன் என்னை காதலிப்பதாக அவன் கூறிவிட்டதாகவும் கூறினான். ஆயினும் அந்த பெண் தொடர்ந்து அவனுக்கு தொல்லை கொடுத்து வருகிறாள். இது எங்கள் இருவர் மத்தியில் ஒரு பிளவை உண்டாக்கியது. நான் இந்த உறவில் இருந்து வெளிவந்து விடலாம் என்றும் எண்ணினேன். அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர ஓராண்டு காலம் எடுத்துக் கொண்டது. என் வாழ்வில் என்ன பிரச்சனை வந்தாலும் அவனே எனக்கு துணையாக நின்றான். நான் மிகவும் லக்கி என நான் கருதி மகிழ்ச்சியாக இருந்தேன். என் சோகத்திலும், இன்பத்திலும் சரியளவு பங்கெடுத்துக் கொண்டான்.
கனவுகள்… நான் என்பது கல்லூரி காலத்தில் கனவு கண்டு வைத்திருந்த கணவனுக்கு நிகரானவன் அவன் இல்லை எனிலும், நான் அவனை மனதார காதலித்து வந்தேன். நான் அவனை ஏன் காதலிக்கிறேன் என யாரேனும் கேட்டால்… அவன் என்னை அவ்வளவு காதலிக்கிறான் என்றே பதில் அளிப்பேன். நான் அவனை காதலிப்பதை காட்டிலும், என்னை அவன் மிகுதியாக காதலித்தான். வருடங்கள் உருண்டோடின… எங்கள் உறவும் மிகவும் வலிமையானது. எங்கள் பிள்ளைகளுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று கூட முடிவு செய்துவிட்டோம். என் மீது சூரிய வெப்பம் கூட பாடாமல் என்னை பார்த்துக் கொண்டான். என்னை ஒரு பிறந்த குழந்தை மீது அக்கறை எடுத்துக் கொள்வது போல பாவித்தான்.
மீண்டும் ஒரு பெண்… நான் இல்லாத காலத்தில், அவன் வேறு ஒரு பெண்ணுடன் சாட்டிங் செய்து கொண்டிருப்பது அறிய வந்தது. ஆயினும் அதை அவன் என்னிடம் மறைக்கவில்லை. அந்த பெண்ணுடன் என்ன பேசுகிறேன், எவ்வளவு நேரம் பேசுகிறேன் என அனைத்தும் கூறினான். ஆனால், அந்த பெண் அவன் அவளுடன் பேசவே இல்லை என்பது போல நடித்தாள். இதன் காரணத்தால் எங்களுக்குள் சண்டை வந்து, பிறகு கடைசியாக அவன் அந்த பெண்ணை பிளாக் செய்துவிட்டான். பிரசவ நேரம் நெருங்கியது, எங்களுக்கு குட்டி தேவதை பிறந்தாள். மூன்று மாதம் கழித்து மீண்டும் என்னவனுடன் இணைந்தேன்.
மகள்! ஆனால், என்னை காட்டிலும், மகள் மீது அவன் அதிக காதலை காண்பித்தான். எனக்கும் மகள் தான் என்ற போதிலும், இதனால் கொஞ்சம் மனவருத்தம் கொண்டேன். இதன் இடையே என மாமியார் சில வேண்டாத வேலைகள் செய்ய துவங்கினார். நான் கணவருக்காக ஒரு உணவை சமைக்க துவங்கினால், அது அவனுக்கு பிடிக்காது செய்யாதே என்பார். ஆனால், அடுத்த நாளே அதே உணவை சமைத்து பரிமாறுவார். இது போல அவர் செய்த ஒருசில காரியங்களால் எனக்கும் எனது கணவருக்கும் தனிமையில் நேரம் இல்லாமல் போனது. நான் இல்லாத போதுஎனது பீரோவை திருந்து வேவு பார்ப்பதை வேலையாக வைத்திருந்தார் மாமியார், இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
சின்ன பிரச்சனை… சின்ன சின்ன பிரச்சனைகள் தான். அதையும் அவரே முன் வந்து தீர்த்து வைத்து விடுகிறார். மகள் மீதான முழு உரிமை எடுத்துக் கொண்டு மிகவும் அக்கறையாக நடந்துக் கொள்கிறார். ஆனால், இப்போது வெறும் சமாதானம் மட்டுமே அவரிடம் இருந்து நான் பெறுகிறேனே தவிர, முன்ன இருந்த அந்த காதல் இல்லை. இந்த பிரச்சனை எல்லார் வீட்டிலும் இருக்கலாம். இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்றாலும்…, முன்பு திகட்ட திகட்ட கிடைத்த காதலும், அன்பும் இப்போது துளிக்கு கூட கிடைக்காமல் போவது எவ்வளவு பெரிய கொடுமை என்பது பெண்களுக்கு மட்டுமே தெரியும்.
நடிகை ஆண்ட்ரியா நடித்த ‘தரமணி’ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் சித்தார்த் நடிக்கும் மும்மொழி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள பாலிவுட் படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா ஜோடியாக நடிக்கவுள்ளனர். இந்த படம் தமிழில் ‘அவள்’ என்ற பெயரில் உருவாகிறது. மேலும் இதே படம் தெலுங்கிலும் உருவாகவுள்ளது.
மிலிந்த் இயக்கவுள்ள இந்த படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என்று சித்தார்த், ஆண்ட்ரியா இருவருமே தங்கள் டுவிட்டரில் உறுதி செய்துள்ளனர். பக்கத்து வீட்டு கதவை தட்டும் கவர்ச்சியான வேடத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளதாகவும், இந்த படத்தின் மூலம் பாலிவுட்டிலும் ஆண்ட்ரியாவுக்கு மார்க்கெட் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது, நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் தான். ஆனால் மக்களால் இவரது வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதைத்தொடர்ந்து, தற்போது வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் ஆரவ் தனக்காக ஓட்டுபோட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
அதோடு டைட்டிலை அனைவருக்கும் சமர்பிப்பதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.
இவரது ட்விட்டுக்கு ஓவியா ஆர்மியினர் வறுத்தெடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஓவியாவுடன் வேண்டுமானால் படங்களில் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கேன் ஆனால் வாழ்க்கையில் ஒன்று சேர வாய்ப்பில்லை என்று ஆரவ் பத்திரிக்கை ஒன்றிற்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓவியாவும் தற்போது ஆரவ்வை காதல் செய்வது போல் தெரியவில்லை. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்டாக இருந்தால் ஓவியா ஆரவ்வை காதல் செய்யவில்லை என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள். ஆரவ் இவ்வாறு கூறியதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்பு தெரிவித்துவருகிறார்கள்.
இன்றைய நவீன உலகில் ஒருவர் சாப்பாடு இல்லாமல் கூட இருந்து விடுவார்கள். ஆனால் செல்போன் இருப்பது கஷ்டம்.
அந்த செல்போன்களால் தொலைதொடர்புக்கு பல நன்மைகள் இருந்தாலும், பெண்கள் விஷயத்தில் கெட்ட விஷயங்களே அதிகம் நடக்கிறது.
அதுபோல 13 வயதான 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அவரது பெற்றோர் செல்போன் ஒன்றை வாங்கி தந்தனர்.
எந்த நேரமும் அந்த செல்போனிலேயே நேரத்தை செலவழித்து வந்துள்ளார்.
னுஎனவே சந்தேகத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் அந்த செல்போனை ஆய்வு செய்தபோது அதில் ஒரு போல்டரில் ரோஸ் லவ்வர் என்ற போல்டர் கிரியேட் செய்யப்பட்டுள்ளது.
அதனை பார்த்தபோது 28 ஆண்களின் பெயர்களும், அவர்களது போன் நம்பரும் இருந்தது.
இதனை தொடர்ந்து அந்த சிறுமியை பெற்றோர் கண்காணித்தபோது இரவில் அந்த அனைத்து ஆண்களிடமும் போனில் பேசிவிட்டு, சாட்டிங் செய்து விட்டுதான் தூங்குகிறாள் என்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் அவளது பெற்றோர் பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர்.
மகளை கண்டித்து செல்போன் சாட்டிங்கில் இருந்து நிறுத்தி விட்டனர். ஆனால் அந்த 28 ஆண்கள் மூலம் வேறு ஏதாவது ரூபத்தில் பிரச்னை வருமோ என அச்சத்தில் உள்ளனர் அந்த சிறுமியின் பெற்றோர்.
ராதிகா ஆப்தே தான் நடித்து வரும் ஹாலிவுட் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார். நிர்வாண காட்சியை மீடியா தான் ஊதி பெரிதாக்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தோனி படம் மூலம் கோலிவுட் வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. அவர் தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் அவரது இந்தி படம் ஒன்று ரிலீஸாகும் முன்பு அவரின் நிர்வாண செல்ஃபீக்கள் வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியது. ராதிகாவோ அந்த செல்ஃபீக்களில் இருப்பது தான் அல்ல என்று தெரிவித்தார். நிர்வாண செல்ஃபீக்களில் இருப்பது ராதிகா ஆப்தே தான் என்று சினிமா வட்டார சகாக்களால் கூறப்படுகிறது. ராதிகா ஆப்தே ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்துள்ளார். அவருக்கு முன்பே சில இந்திய நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நிர்வாணமாக நடித்துள்ளனர். நிர்வாணமாக நடிப்பதில் தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும், இதை மீடியா தான் ஊதி பெரிதாக்குவதாகவும் ராதிகா தெரிவித்துள்ளார். அவரே விரும்பி நிர்வாணமாக நடித்துவிட்டு அதை மீடியா பெரிதாக்குவதாக பழியை தூக்கி பத்திரிக்கையாளர்கள் மீது போட்டுள்ளார்.
நான் நடித்து வரும் ஹாலிவுட் படம் இந்தியாவில் ரிலீஸானால் அந்த நிர்வாண காட்சியை நீக்கிவிட்டு வெளியிடுவார்கள் என்று கூறியுள்ளார் ராதிகா. செக்ஸ் வைத்துக் கொள்வதில், அதை பற்றி பேசுவதில் தவறு எதுவும் கிடையாது. இங்கு தான் அதை பற்றி பேசக் கூடாது என்று உள்ளது என்கிறார் ராதிகா ஆப்தே. ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஃப்ரீடா பின்டோ ஹாலிவுட் சென்றார். அங்கு அவர் ஒரு படத்தில் நிர்வாணமாக படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார். அதை ஒன்றும் மீடியா ஊதி பெரிதாக்கவில்லையே. தான் நடித்துள்ள நிர்வாண காட்சி பற்றி அனைவருக்கும் தெரிய வேண்டும் என ஒருவேளை ராதிகாவே தெரிவித்திருக்கலாம் எனக்கூறப்படுகின்றது.
இந்தி நடிகை கங்கனா ரணாவத் திரை உலகில் உள்ள ஆணாதிக்கம் பற்றி இப்படி கூறுகிறார்….
“நான் ஆண்களை வெறுப்பவள் அல்ல. எனக்கு தோழிகளை விட ஆண் நண்பர்கள் தான் அதிகம். ஆனால் ஆணுக்கு பெண் நிகரானவள் இல்லை என்று கூறுவதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சினிமா துறையில் சில விஷயங்களை ஆண்கள் செய்தால் சரி. பெண்கள் செய்தால் தவறு என்கிறார்கள். உதாரணமாக நடிகர்கள் ‘செக்ஸ்’ வைத்துக்கொண்டால் அது ஜாலி. அதையே பெண்கள் செய்தால் குற்றம்.
சினிமா துறையில் இருப்பவர்கள் தங்களுடைய மகன்கள் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அதை பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் அவர்களுடைய மகள்கள் ‘பிகினி’ உடை கூட அணிய அனுமதிப்பதில்லை. ஒரு நடிகரும் அவருடைய மகனும் பிகினி உடை அணிந்த 15 பெண்களுடன் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய மகள்கள் மட்டும் போர்த்திக்கொண்டு இருக்க வேண்டும்.
நான் நடித்த ‘கேங்ஸ்டர்’ படம் ரிலீஸ் ஆனபோது என் அம்மா சந்தோஷப்பட்டார். ஆனால் என் அப்பாவுக்கு அது பிடிக்கவில்லை.” என்றார்.
ராகினி எம்.எம்.எஸ். 2.2′ வெப் தொடரில் நடிக்கும் போது எதிர்பாராத நேரத்தில் சக நடிகரின் பேண்டை உருவி, நடிகை ரியா சென் சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
பாலிவுட் நடிகையான ரியா சென் சமீபத்தில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கணவருடன் ஐரோப்பிய நாடுகளுக்கு ஹனிமூனுக்கு சென்றிருந்த அவர், அங்கு பொது இடத்தில் வைத்து கணவருக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த விவகாரம் அடங்குவதற்குள்ளாகவே இவர் நடித்து வரும் ‘ராகினி எம்.எம்.எஸ். 2.2’ வெப் தொடரின் முத்தக் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் இணையத்தில் லீக்காகி வைரலானது. இதனால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து தற்போது மற்றும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ரியா சென். ‘ராகினி எம்.எம்.எஸ். 2.2’ படப்பிடிப்பின்போது சக நடிகர் நிஷாந்த்துடன் இணைந்து படுக்கை அறை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில் மிகவும் உற்சாகமான ரியாசென், நிஷாந்திடம் அவருடைய பின் பகுதியை ‘தோஸ்தானா 2’ படத்தில் ஜான் ஆபிரகாம் காண்பித்தது போல் செய்ய வேண்டும் என்றாராம். ஆனால் நிஷாந்த் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரியாசென் திடீர் என்று நிஷாந்தின் பேண்டை பிடித்து இழுத்தார். இதில் அவருடைய பின் பகுதி பளிச் என்று தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷாந்த், எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லிவிட்டு செய்யுங்கள் என்று ரியா சென்னை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தால் மீண்டும் சிக்கலில் சிக்கிக்கொண்டார் ரியா சென். இதனிடையே நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகை ரியா சென். இவர் தமிழில் பிரசாந்துடன் குட்லக் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது மார்க்கெட் இல்லை.
இந்த நிலையில் ஏக்தா கபூரின் புதிய வெப் சீரியசான ராகினி எம்எம்எஸ் ரிட்டர்ன்சில் நடித்து வருகிறார். அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில், ரியா சென், நிஷாந்த் மல்கானி வரும் படுக்கையறை காட்சி வீடியோ கசிந்து சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ரியா சென்னுக்கு கடந்த மாதம்தான் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கஷ்டமாக உள்ளதாக ஏக்தா கபூரிடம் ரியா சென் தெரிவித்து உள்ளாராம். வெப்சீரிஸ் துவங்கும்முன்பே படுக்கையறை காட்சி கசிந்துள்ளது தயாரிப்பாளர் ஏக்தாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.
பிரபல நடிகை மேலாடையில்லாமல் பிரபல நடிகரின் முன் நின்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நடிகை
இலியானா நடிகை அஜய் தேவ்கனுடன் 'பாத்ஷாஹோ' படத்தில் நடித்துள்ளார். இதில்
ஒரு காட்சியில் இவர் நடிகர் அஜய் தேவ்கன் முன் மேலாடையில்லாமல் நிற்பது போல
நடித்திருக்கிறார்.
இதுபற்றி இலியானா கூறுகையில், ''இந்த மாதிரியான
காட்சிகளில் நான் நடித்தது இல்லை. ஆனால் அப்படி நடிக்க மாட்டேன், இப்படி
நடிக்கமாட்டேன் என நான் ஒருபோதும் சொன்னதில்லை.
கதைக்கு தேவையானால் நடிப்பேன். 'பாத்ஷாஹோ' படத்தில் மேலாடையில்லாமல் நடிக்க வேண்டும் என எனக்கு தோன்றியது.
காதலன்
மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டத்தான் அப்படி ஒரு காட்சி.
இயக்குனரிடம் இந்த யோசனையை சொல்லவே அவரும் ஓகே சொல்லிவிட்டார்.
அந்த
காட்சியில் நடித்து முடித்ததும், அடுத்தவர் எனக்கு உடையை எடுத்து வரும்
வரை அஜய் எனக்கு பாதுகாப்பு கொடுத்தார்'' என கூறுகிறார் இலியானா.
தனது விதவை மருமகள் மீது அசிட் வீசி கொலை செய்த மாமனார் தொடர்பான செய்தி கடுவலை – கொரதொட்ட பிரதேசத்தில் தெரியவந்துள்ளது. 34 வயதான அந்த பெண்ணின் மீது அசிட் வீசிய நபரின் வயது 74 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெண்ணின் கணவர் (அசிட் தாக்குதலை மேற்கொண்ட நபரின் மகன்) சில வருடங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார்.
பின்னர் அவர் 7 வயதான பிள்ளையுடன் கணவரின் வீட்டில் மாமா மற்றும் மாமியாருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவு திடீரென அந்த பெண்ணின் மீது திரவம் போன்று ஒன்று விழுவதை உணர்ந்துள்ளார்.
பின்னர் அவருக்கு கடும் வேதனை ஏற்பட்டுள்ளது.
பின்னர்
அந்த பெண் அலறியப்படி தனது குழந்தையுடன் வீட்டுக்கு வெளியே வந்து,
வீதியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்றில் ஏறி மருத்துவனையில்
அனுமதியாகியுள்ளமை, அவர் உயிரிழப்பதற்கு முன் காவல்துறைக்கு வழங்கிய
வாக்குமூலத்தில் காணப்படுகிறது.
அவர் கொழும்பு தேசிய மருத்துவனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பிள்ளையும் அசில் தாக்குதலுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசிட் தாக்குதலை மேற்கொண்ட 74 வயதான நபரை காவல்துறை கைது செய்துள்ளது.
பெங்காலி பட நடிகை காஞ்சனா மொயித்ராவை, குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகை காஞ்சனா மொயித்ரா கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு, படப்பிடிப்பை முடித்து தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, ஸ்ரீடி கிராசிங் என்ற இடம் அருகே அவர் வந்த போது, குடி போதையில் இருந்த மூன்று வாலிபர்கள் அவரது காரை வழிமறித்துள்ளனர்.
அதன் பின் காரில் இருந்த சாவியை ஒருவன் பிடிங்கிக்கொண்டதோடு, காருக்கு
வெளியே அவரை இழுத்து, அவரது உடலில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு அவரை
பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
அவர்களிடமிருந்து எப்படியோ தப்பிய நடிகை, பெலாலா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் சங்கர் டவுலி (25), சூரஜித் பாண்டே (25) என்ற இருவரை பொலிசார் கைது செய்தனர்.
மேலும், தப்பி ஓடிய ஒருவனையும் பொலிசார் தேடி வருகின்றனர்.