Search This Blog

Tuesday, October 3, 2017

எடை குறைக்கும் முயற்சியால் அனுஷ்கா சோர்வு?

Anushka-become-tired-while-trying-for-weight-loss.


தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா தற்போது பாகமதி என்ற படத்திலும், பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'பாகுபலி 2' சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முன்னிலையில் உள்ளது.

'பாகுபலி 2' படத்துக்கு முன்னதாக 'இஞ்சி இடுப்பழகி' என்ற படத்தில் நடித்தார் அனுஷ்கா. இதில் நடிப்பதற்காக 100 கிலோ வரை எடை கூடி குண்டான தோற்றத்துக்கு மாறினார். கதாபாத்திரத்துக்காக அனுஷ்காவின் இந்த அர்பணிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன.

இந்தப் படத்துக்குப் பின்னர், 'பாகுபலி 2' படத்தில் நடிப்பதற்காக அவர் உடல் எடையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் நினைத்தபடி எடையைக் குறைக்காமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளனார் அனுஷ்கா.

இதையடுத்து 'பாகுபலி 2' படத்தில் அனுஷ்காவை ஸ்லிம்மாக காட்டுவதற்கு என பல கோடிகள் செலவு செய்யப்பட்டது.

இந்நிலையில், எடையை எப்படியாவது குறைத்து பழைய படி ஸ்லிம் தோற்றத்துக்கு மாற டயட், உடற்பயிற்சி, யோகா என அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் இவை எதுவும் கைகொடுக்கவில்லை. இதையடுத்து அமெரிக்கா சென்று உடல் எடை குறைக்கும் தெரிப்பியும் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதன் பலனாக கொஞ்சம் எடை குறைந்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே அனுஷ்காவுக்கு வர வேண்டிய பல வாய்ப்புகள் உடல் எடை காரணமாகவே நழுவி போனது. ஆனாலும் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பான தோற்றத்தை பெறும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் அனுஷ்கா.

இதன் காரணமாக தற்போது அவர் சோர்வுடன் காணப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல தெலுங்கு திரைப்படத்தின் பிரிவியூ ஷோ ஒன்றை பார்க்க அனுஷ்கா வந்திருந்தார். அப்போது அவருடன் சேர்ந்து ரசிகர்கள் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.  இதில் அந்தப் படத்தில் நடித்த ஹீரோயினான மெஹ்ரீன் பிர்ஸாடாவும், அனுஷ்காவோடு சேர்ந்த எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார். 




எடை குறைந்ததாக கூறப்பட்ட அனுஷ்கா, இந்த போட்டோவில் மிகவும் சோர்வாக உள்ளார். இதுமட்டுமில்லாமல் அவர் தோற்றத்தில் பொலிவு இல்லாமல் இருப்பதாகவும், இதன் பின்னணியில் இந்த எடை குறைப்பு சமாச்சாரமே இருப்பதாகவும் திரையுலகினர் பேசி வருகின்றனர்.

No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...