அஜித் நடிப்பில் வெளியான 'விவேகம்' படத்தின் டீஸர் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் விஜய் ரசிகர்கள் 'மெர்சல்' டீஸருக்காக களமிறங்கியிருக்கிறார்கள்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'மெர்சல்' படத்தின் டீஸர் மாலை
6 மணிக்கு படக்குழு வெளியிட்டது. இதற்கு இணையதளத்தில் பெரும் வரவேற்பு
கிடைத்துள்ளது.
"நீ பற்றவைத்த நெருப்போன்று பற்றி எரிய உனை கேட்கும். நீ விதைத்த வினை
எல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்" என்று விஜய் டீஸரில் பேசிய வசனத்தைக்
குறிப்பிட்டு பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கிராமத்து இளைஞர்,
மேஜிக் நிபுணர், மருத்துவர் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்
விஜய். பிரம்மாண்டமான காட்சியமைப்பு, நடனம், மேஜிக் காட்சிகள் என
இடம்பெற்றுள்ள டீஸருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், 'மெர்சல்' டீஸருக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. 90 விநாடிகள் - 25000, 3 நிமிடங்கள் - 50000, 7 நிமிடங்கள் - 75000, 10 நிமிடங்கள் - 1 லட்சம், 15 நிமிடங்கள் - 150000, 19 நிமிடங்கள் - 175000, 22 நிமிடங்கள் - 200000 என லைக்குகளை கடந்துள்ளது. தற்போது 3,33,000 லைக்குகளை கடந்திருக்கிறது. மிக குறுகிய நேரத்தில் இவ்வளவு லைக்குகளை குவித்த டீஸராக 'மெர்சல்' இருக்கும்.
சமீபத்தில் 5,72,000 லைக்குகளை கடந்து 'விவேகம்' டீஸர் உலக சாதனை பெற்றது. இதனை கடக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு லைக்குகளை குவித்து வருகிறார்கள். இந்த வேகத்தால் இன்னும் சில நாட்களில் உலக சாதனையை 'மெர்சல்' நிகழ்த்தும் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment