கலகலப்பு திரைப்படத்தில் நடித்த ஓவியா என்பதை விட இப்போதெல்லாம் BIG BOSS ஓவியா என்றால் தான் எல்லோருக்கும் தெரியும்.
கலகலப்பு திரைப்படத்தில் விமல்,
அஞ்சலி, சிவா, ஓவியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.இந்தப் படத்தில் ஒரு
பாடலுக்கு ஓவியா படு கவர்ச்சியாக நடித்திருந்தார் என்பது எல்லோரும்
அறிந்தததுதான்.
இப்படி இருக்க கலகலப்பு 2 படத்தில் நடிக்குமாறு சுந்தர் சி நம்ம ஓவியாவைக் கேட்க அவரோ மறுத்து விட்டாராம் .
காரணம் ஓவியாவை கவர்ச்சியாக நடிக்குமாறு கேட்டார்களாம்.
கவர்ச்சியாக நடித்தவர் ஏன் மறுக்கிறார் என்றால் ,BIG BOSS நிகழ்ச்சி மூலம்
தனக்கு கிடைத்துள்ள ரசிகர் பட்டாளத்தின் பாசத்தை,மதிப்பை மனதில் வைத்து
கவர்ச்சிக்கு நோ சொல்லி கலகலப்பு 2 திரைப்படத்தில் நடிக்கவே
மறுத்துவிட்டாராம் ஓவியா.
ஓவியா நடிக்க மறுத்த பிறகே பிற நடிகைகளை ஒப்பந்தம்
செய்தார்களாம்.கலகலப்பு 2 படத்தில் ஜீவா, ஜெய், கேத்ரீன் தெரசா, நிக்கி
கல்ராணி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.கலகலப்பு 2 படப்பிடிப்பு அடுத்த மாதம்
துவங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment