Search This Blog

Monday, October 2, 2017

காதலில் தோற்ற விரக்தியில் தன்னைத்தானே மணந்துகொண்ட விநோதப் பெண்

italian-woman-gets-married-to-herself


இத்தாலியைச் சேர்ந்த பிரபல உடற்பயிற்சியாளர் லாரா மெஸி(40). 12 ஆண்டுகளாகக் காதலித்து வந்தவருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர்.



இந்நிலையில் தன் மனதுக்குப் பிடித்த நேர்மையான மனிதரைத் தேடிப் பிடித்து வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்வேன் என சபதம் இட்டார்.

தனது காதல் தோற்றுப்போனதால் பெயருக்காக ஒருவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ளப்போவதில்லையென்றும் உண்மையாக நேசிப்பவருடன்தான் சுதந்திரமாக வாழமுடியும் என்பதால் அப்படிப்பட்டவரைத் தேடிப்பிடித்துத் திருமணம் செய்வேன் என்றும் தனது 40 ஆவது பிறந்தநாளுக்குள் அப்படியொருவர் அமையாவிட்டால் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளப்போவதாக லாரா மெஸி தனது நண்பர்கள், உறவினர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் 40 வயதை வியாழக்கிழமை அடைந்தார். இதையடுத்து ரோமில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தனது திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் 70-க்கும் மேற்பட்ட தனது நெருங்கிய உறவினர்கள், தோழிகளுக்கு அழைப்பு விடுத்து அவர்களும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் புதுமணப்பெண்ணுக்குரிய அட்டகாசமான டிசைனர் உடையை லாரா அணிந்திருந்தார். பிரமாண்டமான திருமண கேக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கேக்கின் மேல் ஒரு அழகிய பெண் பொம்மை வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கேக்கை வெட்டி தனது திருமணம் நடந்துமுடிந்ததாக லாரா மெஸி அறிவித்தார். விருந்தினர்கள் உற்சாகமாக அவரைப் பாராட்டினர்.




ஒருவர் தன்னைக்காட்டிலும் வேறுயாரையும் இந்த உலகில் விரும்பமாட்டார்கள். எனவே நானே என்னைத் திருமணம் செய்துகொண்டுவிட்டேன். இப்படியே மகிழ்ச்சியாக வாழ்வேன். திருமணம் முடிந்தவுடன் உல்லாசமாகத் தனியாகத் தேனிலவுக்குச் சென்று வருவேன். 

ஒருவேளை என்றைக்காவது என் மனதுக்குப் பிடித்தவரை சந்திக்க நேர்ந்தால் திருமணம் செய்துகொள்வேன். இருந்தாலும் அவருக்காக எனது சந்தோஷத்தை பறிகொடுக்க மாட்டேன் என்று சொல்லி அசத்தினார் லாரா மெஸி.

No comments:

Post a Comment

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...