Search This Blog

Monday, October 2, 2017

உடலுறவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரைகள்

உடலுறவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரைகள்



தேவையற்ற கர்ப்பத்தைத் தடுப்பதற்காக, உடலுறவுக்குப் பிறகு கூடிய விரைவில் எடுத்துக்கொள்ளும் அவசரநிலை கருத்தடை மாத்திரைகள் உள்ளன. கருமுட்டை வெளியிடப்படும் செயலைத் தடுப்பதன்மூலம்/தாமதிப்பதன் மூலம் இவை கருத்தடை செய்கின்றன என்று கூறப்படுகிறது. இவை மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கக்கூடியவை. ஆனாலும் இவை பற்றி பலருக்கு அதிகம் தெரிவதில்லை. இந்த அவசரநிலை கருத்தடை மாத்திரைகள் பற்றிய சில தவறான கருத்துகளைப் பற்றித் தெளிவு படுத்தவே கீழே சில தகவல்களைக் கொடுத்துள்ளோம்:
1. இவற்றை காலையில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தவறு (Not only meant for morning after)
உடலுறவுக்குப் பிறகு எவ்வளவு முடியுமோ அவ்வளவு முன்கூட்டியே இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது சிறந்த பலன் கொடுக்கும், ஆங்கிலத்தில் இவற்றை மார்னிங்-ஆஃப்டர் பில்ஸ் என்பார்கள், அதை வைத்து இவற்றை காலையில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டாம்!
2. மற்ற முறைகளைவிட இவை அதிக பலன் கொடுப்பவை (Morning-after pills can be relatively effective)
பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு 24 மணிநேரத்திற்குள் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் அதில் 95% பலன் கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், 72 மணிநேரத்திற்குள் எடுத்துக்கொண்டால் கர்ப்பமடையும் வாய்ப்பை 89% குறைக்கிறது என்று கூறப்படுகிறது.
3. இவை தோல்வியடையாது என்பது தவறு (However, they are not fail-proof)
மாத்திரைகளுடன் வரும் வழிகாட்டித் தாளில் இருப்பவற்றைப் படிக்கத் தவற வேண்டாம்! கருத்தடை மாத்திரைகள் எப்போதும் 100% செயல்திறன் கொண்டவையல்ல. அவசர சூழ்நிலைகளில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும், தொடர்ந்து கருத்தடைக்காக அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இவை கர்ப்பமடையும் வாய்ப்பை 89% குறைக்கிறது என்று ஆய்வுகள் காண்பித்தாலும், இவை தோல்வியடைந்து கர்ப்பம் உண்டாக 11% வாய்ப்புள்ளது! பால்வினை நோய்களில் இருந்து இவை உங்களைப் பாதுகாக்காது என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
4. இவை பக்க விளைவுகள் உள்ளவை (Side effects exist)
இந்தக் கருத்தடை மாத்திரைகள் பின்வருபவை போன்ற சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்:


குமட்டல்
தலைச்சுற்றல்
அடிவயிற்றில் வலி
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த பக்க விளைவுகள் சில நாட்களுக்கு நீடிக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது, சிலசமயம் இவற்றுடன் கறைபடுதல், மாதவிடாய் தாமதமாதல், மாதவிடாய் வராமல் தவறுதல் ஆகிய பக்க விளைவுகளும் இருக்கலாம்.
5. இவை கருக்கலைப்பு மாத்திரைகளல்ல (Not an abortion pill)
புரோஜெஸ்ட்டின் மட்டும் கொண்டுள்ள அவசரநிலை கருத்தடை மாத்திரைகள் ஏற்கனவே உருவாகியிருக்கும் கருவை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை என்று சில மருத்துவ வல்லுநர்கள், தெரிவிக்கின்றனர். அதாவது, ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் பெண் கருத்தடை அவசரநிலை கருத்தடை மாத்திரையை எடுத்துக்கொண்டால், அதனால் கரு கலையாது.

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்..? அப்படின்னா இதை படிங்க

lovers fight
படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்..? அப்படின்னா இதை படிங்க


திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதோ சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம்.
1. கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக பேச மற்றும் காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கை அறை நேரம் தான். இந்த நேரத்தை உறவை வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு இருவேறு துருவங்கள் போல பிரிந்து படுப்பது கணவன் மனைவி உறவுக்கு நல்லதல்ல என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
2. படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் போரடித்து விடும். உங்கள் மனைவி உங்களை தொடும் போது கூட உங்களுக்கு பெரிதாக எந்த உணர்ச்சியும் வராது.


3. நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட பெரிதாக நாட்டமில்லாமல் போகும்.
4. நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறு ஒருவர் மீது காதல்வயப்பட வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் உங்கள் மனைவியுடன் படுத்து உறங்குவது உங்களுக்கு யாரோ ஒரு தெரியாத நபருடன் படுத்து உறங்குவது போன்ற அனுபவத்தை தரும். அவர் மீது நாட்டமில்லாமல் போகும்.
5. உடலுறவு மற்றும் காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும் போது அடிக்கடி கணவன் மனைவிக்குள் சண்டை வரும்.
உங்களது கவனம் வேறு ஒரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், உங்களது துணையை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

தமிழ் பிட் படத்தில் இருந்து குளியல் காட்சி வீடியோ

உடலுறவால் உண்டாகும் ஆச்சரியமூட்டும் நன்மைகள்!

daily sexy advantage
உடலுறவு பற்றி நடத்திய ஆய்வில் தினசரி உடலுறவு கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உடலுறவு கொள்வதால் வயதானவர்களுக்கு கூட மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறதாம்.
மேலும் தொடர்ச்சியாக உடலுறவு வைத்துக்கொள்பவர்களால் மொழிகளை சரளமாக பேச முடிகிறது எனவும் அவர்களால் பொருட்களை தெளிவாக பார்க்க முடிகிறது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக உடலுறவு வைத்துக்கொள்வதால் மேலும் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.


1. மனநிலை மேம்படுகிறது
உடலுறவை காட்டிலும் காதல் உணர்வு உடலில் ஒரு வித வேதியியல் மாற்றத்தை உண்டாக்குகிறதாம். மேலும் உடலுறவுக்கு முன் விளையாட்டுகள் உடலில் பாலியல் உணர்வை தூண்டும் செயல்களை அதிகரிக்க செய்கிறது. ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் உடலுறவுக்கு பின்னர் விடுவிக்கப்படுகிறது. இது மன அமைதியையும் நல்ல நிம்மதியான உறக்கத்தையும் தருக்கிறது.
2. கட்டிப்பிடித்தல்
ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் இருபது நிமிடங்கள் உங்களது துணையை கட்டி அணைப்பதாலும் விடுவிக்கப்படுகிறது. ஆண்களுக்கு இதனால் ஏற்படும் உணர்வை விட பெண்களுக்கு நான்கு மடங்கு அதிகமாக இந்த உணர்வு ஏற்படுக்கின்றது. இது பெண்களுக்கு பாலியல் உணர்வை தூண்டுவதாகவும் அமைகிறது.
3. உடலுறவுக்கு பின்னர் மகிழ்ச்சி
செரோடோனின் என்ற உடலின் முக்கிய ஆண்டிடிஸ்பெரன்ட் என்ற ரசாயனமானது உடலுறவுக்கு பின்னர் மகிழ்ச்சியடையவும், சிரிக்கவும், நிம்மதியடையவும் இது காரணமாக உள்ளது.
4. ஆய்வு முடிவுகள்


300 பெண்களிடம் நடத்திய ஆய்வில், உடலுறவு ரீதியாக மகிழ்ச்சியாக வாழும் ஒரு பெண், உடலுறவு இன்றி வாழும் ஒரு பெண்ணை விட மகிழ்ச்சியாக வாழ முடிகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உடலுறவு ஒருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
5. இருதயத்திற்கு நல்லது
வாரத்திற்கு மூன்று முறை உடலுறவு வைத்துக்கொண்டால் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தில் இருந்து தப்பிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் காதல் அதிகரிக்கும் போது ஆண்களுக்கு மாரடைப்பிற்கான ஆபத்து அதிகரிக்கிறது என்ற கருத்து முற்றிலும் தவறானது எனவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
6. உடற்பயிற்சி
உடலுறவு என்பது உங்களது உடலை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்வதற்கான ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவும் உள்ளது. உடலுறவு வைத்துக்கொள்வது மையில் கணக்கில் ஓடுவதற்கும், விமானங்களின் படிக்கட்டுகளில் இரண்டு முறை ஏறி இறங்குவதற்கும் சமமானதாக இருக்கிறதாம். மேலும் உடல் ரீதியாக பலமாக உள்ளவர்கள் தினமும் உடலுறவு வைத்துக்கொள்வதில் தவறு எதுவும் இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன.
7. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
உடலுறவு வைத்துக்கொள்வதால் சளி மற்று காய்ச்சலை எதிர்த்து செயல்படும் நோயெதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறதாம். மேலும் இது உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறதாம்.
8. வாழ்நாள் அதிகரிக்கிறது
தொடர்ந்து உடலுறவு வைத்துக்கொள்வது உங்களது வாழ்நாளை அதிகரிக்கிறதாம். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உடலுறவு வைத்துக்கொள்பவர்களை காட்டிலும் தினமும் உடலுறவு வைத்துக்கொள்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்கிறார்களாம்.


9. கருவுறுதல்
அதிகமாக உடலுறவு கொள்வது கருவுறும் திறனை அதிகரிக்கிறது என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பொதுமான அளவு விந்தணுக்கள் இல்லாத ஆண்களுக்கு கூட தினசரி உடலுறவு வைத்துக்கொள்வது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறதாம். இது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கருவுறுதலுக்கு உதவி செய்கிறது.

அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...