Search This Blog
Showing posts with label Love. Show all posts
Showing posts with label Love. Show all posts
Saturday, October 21, 2017
Wednesday, October 11, 2017
பெண்கள் ஏன் தன்னைவிட வயது குறைவான ஆணை அதிகம் விரும்புகிறார்கள்?
ஆனால் தற்போது மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பெண்கள் தங்களைவிட குறைவான வயதுடைய ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளவும் ஆண்கள் தங்களைவிட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்கள்.
திருமணம் குறித்தும் தங்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில்,
தாயின் செல்லப்பிள்ளையாக இருக்கும் ஆண்களை மணப்பதில் ஆட்சேபமில்லை என்றும், அதனால் திருமண வாழ்வு பாதிக்காது என்றும் 80 சதவீத இளம்பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதில் 95 சதவீதம் பேர் ஆர்வம் உள்ளதாகக் கூறியுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
தங்களை விட வயது குறைவான ஆண்களை திருமணம் செய்துகொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை என்று 97 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெண்களுடன் ஷாப்பிங் செல்வதில் ஆர்வம் காட்டாதது ஏன் என்ற கேள்விக்கு, பொறுமையின்மை மற்றும் சலிப்பு ஆகியவையே முக்கியமான காரணங்களாக ஆண்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tuesday, October 3, 2017
Monday, October 2, 2017
பொண்ணுங்களோட லவ் சிக்னல எப்படி கண்டுபிடிக்கிறது?.
இதழ்கள் சொல்லும் பொய்களை கண்கள் எப்போதுமே காட்டிக் கொடுத்துவிடும். அதிலும் காதல் விஷயத்தில் கண்கள் எப்போதும் பொய் சொல்வதேயில்லை. பெண்கள் பொதுவாகவே தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக வெளியில் சொல்வதில்லை.
பெண்கள் அவர்களுடைய உடல்மொழி மூலம், தங்களுடைய வெளிப்படுத்திவிடுவார்கள். ஆனால், பெரும்பாலான ஆண்கள் அதைப் புரிந்து கொள்ளாத மக்குகளாகவே இருந்துவிடுகிறார்கள். அப்படி என்னென்ன மாதிரியான உடல்மொழியைப் பெண்கள் வெளிப்படுத்துகிறார்கள்?
எப்போதும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார்கள். போன், சாப்பிடும் நேரம், ஷாப்பிங் என எல்லா நேரங்களிலும் உங்களைப் பற்றியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். இது ஒரு நல்ல தொடக்கம் தான்.
உங்கள் முன் நிற்கும் போது, கைகளைக் கட்டாமல் நேராக நிமிர்ந்து நின்றாலே, நான் உன்னை விரும்புகிறேன். நீ என்னை அணுகலாம் என்றே பொருள். ஆனால் பெண்கள் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு நின்றால், அவர்களுக்கு உங்கள் மேல் பெரிதாக ஆர்வமில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தான் விரும்பும் ஆண்களின் கண்களைப் பெண்களால் தொடர்ந்து, 10 நொடிகளுக்கு மேல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால், பெரும்பாலும் தரையைப் பார்த்தோ அல்லது உங்களின் ஆடை மற்றும் வேறு எதையாவது பாா்த்துக் கொண்டே பேசிக்கொண்டிருப்பார்கள். அதை வைத்தே புரிந்து கொள்ளலாம். அவர் உங்களை நேசிக்கிறார்கள் என்று. பேசி முடித்தபின்ப, உங்களை் கண்களைப் பார்த்து சிரித்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.
நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்கள் உங்கள் முகத்தைப் பார்ப்பதில்லை என்று வருத்தப்படுகிறீர்களா? நீங்கள் பேசும்போது, உங்கள் உதடுகளை நோக்கியோ அல்லது உங்கள் தோள்களை நோக்கியோ அவர்களுடைய கண்கள் அலைபாய்ந்தால், நிச்சயம் அவர்கள் உங்களிடம் கவிழ்ந்துவிட்டார்கள்.
நீங்கள் அவர்களைப் பார்க்கும்போது, தலையைக் கோதிக்கொண்டே, விரல்களால் தலைமுடியை காதோரமாக ஒதுக்கிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். அதை நீங்கள் கவனிக்கிறீர்களா என்றும் அவ்வப்போது பார்த்துக் கொள்வார்கள்.
தங்களுடைய கழுத்துக்குக் கீழே அவர்களுடைய பார்வை அடிக்கடி சென்று கொண்டிருக்கிறது என்றாால், ஏன் இன்னும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள் என்று உங்களிடம் கேட்பதாக அர்த்தம்.
எப்போதும் நிற்கும்போதோ நடக்கும்போதோ உங்களை நெருங்கியே இருக்கிறார்கள் என்றால், உன் அருகாமை எனக்குத் தேவை. உடல், உணர்வு ரீதியாக நான் உன்னுடன் இணைந்திருக்கிறேன் என்று சொல்ல நினைக்கிறார்கள்.
இந்த லவ் சிக்னல்களைப் புரிந்து கொண்டாலே நீங்கள், காதலில் பாதி வெற்றியை எட்டிவிட்டீர்கள் என்று பொருள்.
பெண்களைக் கவர வேண்டுமா?… அப்போ இந்த 10 ஐடியாவ ஃபாலோ பண்ணுங்க…
எந்தெந்த விஷயங்களை ஆண்கள் செய்தால், பெண்கள் அதிகம் உற்சாகம் அடைவார்கள் என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நபர்களுக்கு விருப்ப, வெறுப்பு மாறுபட்டு காணப்படலாம். ஆனால், பொதுவாக அனைவருக்கும் பிடித்த விஷயங்களும் இருக்கத்தானே செய்கிறது. இதற்கு இல்லை என்று யாரும் பதில் சொல்ல முடியாது.
ஹே, நீ உடம்பு இளைச்சுட்ட” என உடல் எடை குறைந்தது பற்றி… அல்லது குறைந்து காணப்படுகிறாய் என கூறினால்
ஹே, நீ உடம்பு இளைச்சுட்ட” என உடல் எடை குறைந்தது பற்றி… அல்லது குறைந்து காணப்படுகிறாய் என கூறினால்
அவர்கள் ட்ரை செய்த புதிய ஹேர் ஸ்டைல் மற்றும் புதிய வகை ஆடை உடுத்தியது அவர்களுக்கு எடுப்பாக இருக்கிறது என மெச்சியபடி பேசினால்.
அட, இன்னிக்கி நீ எக்ஸ்ட்ரா அழகா இருக்க…” இந்த வாக்கியத்தை நீங்கள் சொல்லிவிட்டால் நாள் முழுக்க பெண்கள் உற்சாக வெள்ளத்தில் மிதப்பார்கள்.
அவர்களது உண்மை வயதை காட்டிலும், குறைந்த வயது மதிப்பிட்டு நீங்கள் கூறிவிட்டால் ஏகபோக உற்சாகம் அடைந்துவிடுவார்கள்.
எதிர்பார்க்காத போஸ்ட்க்கு ஃபேஸ்புக்ல லைக்ஸ் எக்கச்சக்கமா குவிஞ்சா…
தனது கிரஷ் அல்லது பிடித்த நபர் தானாக அவரே வந்து தன்னுடன் பேசி சென்றால்..
தனியா வீட்ல தோழிகளுடன் என்ஜாய் பண்ண நேரம் கிடைத்தால்…
கார் அல்லது பைக்கில் தனது விருப்பமான நபருடன் லாங் டிரைவ் சென்றால்
தனக்கு பிடித்த, எதிர்பார்த்த வேலை, பிடித்த இடத்திலேயே கிடைத்து விட்டால்…
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்… வேற என்ன…. தீடீர்னு யாராவது லவ் ப்ரபோஸ் பண்ணா ஷாக்கிங் கலந்த உற்சாகத்தில் மிதப்பார்களாம். ஆனால், இதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள்.
காதல் முறிந்தால் கவலையில்லை
இப்போதெல்லாம் காதல் முறிவு (பிரேக் அப்) பற்றி அதிகமாக பேசப்படுகிறது. காதலில் தோல்வி அடைந்தவர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகிறார்கள். ஒருசிலர் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். படித்து கொண்டிருப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மனதொடிந்து போய்விடுகிறார்கள்.
சிலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் தவறான முடிவுக்கு வருகிறார்கள். விடுதியில் தங்கி படிக்கும் பெண்கள் காதல் முறிவு ஏற்பட்டால் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். காதலில் தோல்வி அடைந்துவிட்டால் அதனை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
அதில் இருந்து மீள்வதற்கு மனதை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். அவரை விட சிறந்தவர் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சமாதானம் செய்து கொண்டு அந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும். பெற்றோரும் மகளிடம் பக்குவமாக பேசி அதிலிருந்து மீள வைக்க வேண்டும்.
அதைவிடுத்து, ‘நான்தான் அப்போதே சொன்னேனே. அவன் நல்லவன் இல்லை என்று! நீ கேட்காமல் அவன் பின்னால் சென்றாய். இப்போது அதற்கான தண்டனையை அனுபவிக்கிறாய்’ என்று கூறி அவள் மனதை காயப்படுத்தக்கூடாது. முன்பை விட அதிக அன்பை பொழிய வேண்டும். அவள் வாழ்க்கை மீது அதிக அக்கறை காண்பித்து, அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.
Sunday, October 1, 2017
இந்த 9 அறிகுறிகளை வைத்து அவன் தன்னை விரும்புகிறான் என பெண்கள் அறிந்துக் கொள்வார்கள்!
பெண்களின் மனதை ஆண்கள் அறிவது தான் கடினமே தவிர, ஆண்களின் மனதை அறிவது பெண்களுக்கு மிக எளிதான ஒன்று. நீங்கள் ப்ரபோஸ் செய்து தான், காதலிப்பதை அவர் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றில்லை.
நீங்கள் அவருடன் பழகும் போது செய்யும் செயல்களை வைத்தும், நீங்கள் எப்படி ரியாக்ட் செய்கிறீர்கள் என்பதை வைத்துமே பெண்கள், ஒருவர் தன்னை விரும்புகிறாரா? இல்லையா? என தெரிந்துக் கொள்வார்களாம்.
அப்படி, ஆண்களிடம் “அவன் நம்மல லவ் பண்றான் போல…” என வெளிப்படும் அறிகுறிகள் என பெண்கள் கூறும் 9 விஷயங்கள்…
ரெண்டு தடவ…!
ஒரு மெசேஜ் அனுப்பினால் அதற்கு கசகசவென பலமுறை ரிப்ளை செய்தால்… கன்பார்மாக நீங்கள் அவரை விரும்புவது அப்பட்டமாக தெரிந்துவிடும். தெரியக் கூடாதுன்னு நெனச்சா பார்த்து பக்குவமா நடந்துக்குங்க… இல்லாட்டி ஃப்ரீயா விடுங்க…

அணைப்பு!
சாலை கடக்கும் போது, ஏதேனும் வாகனம் வேகமாக வரும் போது, யாராவது உரசுவது போல நெருங்கும் போது, அவரது கைகளை / தோளை பற்றிக் கொண்டு பாதுகாப்பதை வைத்தும் பெண்கள் அவன் தன்னை விரும்புகிறான் என்பதை அறிகிறார்.
சாலை கடக்கும் போது, ஏதேனும் வாகனம் வேகமாக வரும் போது, யாராவது உரசுவது போல நெருங்கும் போது, அவரது கைகளை / தோளை பற்றிக் கொண்டு பாதுகாப்பதை வைத்தும் பெண்கள் அவன் தன்னை விரும்புகிறான் என்பதை அறிகிறார்.
மொபைல்!
அவர்களுடன் வெளியே செல்லும் போது, எங்கேனும் பார்த்து பேசும் போது, அவரிடம் பகிர்ந்துக் கொள்ளும் தருணங்களில் உங்கள் மொபைல் அழைப்புகளை தவிர்ப்பது, மொபைலை பயன்படுத்தாமல் இருப்பதை வைத்து நீங்கள் அவரை விரும்புகிறீர்கள் என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள்.

பிடித்தவை!
எனக்கு இதெல்லாம் பிடிக்கும்… இதெல்லாம் நான் விரும்பி செய்வேன் என. உங்களுக்கு பிடித்த எல்லாவற்றையும் அவர்களிடம் பகிர்வதை வைத்து நீங்கள் அவரை விரும்புகிறீர்கள் என்பதை அறிந்துக் கொள்கிறார்கள் பெண்கள்.
எனக்கு இதெல்லாம் பிடிக்கும்… இதெல்லாம் நான் விரும்பி செய்வேன் என. உங்களுக்கு பிடித்த எல்லாவற்றையும் அவர்களிடம் பகிர்வதை வைத்து நீங்கள் அவரை விரும்புகிறீர்கள் என்பதை அறிந்துக் கொள்கிறார்கள் பெண்கள்.
விண்ணைத் தாண்டி…!
நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ… போ… போ… என மார்கெட், சினிமா, ஷாப்பிங் என ஹட்ச் நாய் குட்டி போல ஒரு முறை கூட முடியாது, பிஸி என கூறாது அழைக்கும் இடமெல்லாம் பின்னாடியே போய் கொண்டிருந்தால் அவன் நம்மல லவ் பண்றானோ என்ற சந்தேகம் பெண்கள் மனதில் எழ துவங்கிவிடும்.

விட்டு செல்லுதல்…!
எங்கேனும் வெளியே சென்று திரும்பும் போதோ அல்லது அவரது வீடு சென்று திரும்பும் போதோ உங்கள் பொருளை தவறிவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தால் நீங்கள் அவரை விரும்புவதை அவரது குடும்பமே அறிந்துக் கொள்ளும்.

மிஸ் யூ…!
ஒரு நாள் பிரிந்தாலும், பேச முடியாமல் போனாலும் மிஸ் யூ என செய்தி அனுப்பும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் அவரை விரும்புவதை அறிந்துக் கொள்வார். ஆழமான நட்பிலும் இது இருக்கும் என்றாலும், ஆண்களிடம் ஆண் நண்பர்களுக்கு மிஸ் யூ சொல்லும் வழக்கம் கிடையவே கிடையாது.

அறிமுகம்!
உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் அவரை அறிமுகம் செய்து வைத்து அசடுவழிய சிரிப்பதை பார்த்தால் இன்ஸ்டன்ட்டாக நீங்கள் விரும்புவதை பெண்கள் அறிந்துக் கொள்வார்கள்.
உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் அவரை அறிமுகம் செய்து வைத்து அசடுவழிய சிரிப்பதை பார்த்தால் இன்ஸ்டன்ட்டாக நீங்கள் விரும்புவதை பெண்கள் அறிந்துக் கொள்வார்கள்.
அருகாமையில் தங்க…!
என்றாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா. லேட் நைட், அவர் வீட்டிலேயே தங்கிடலாம் என நீங்கள் ப்ளான் செய்வதை அறிந்தால், நீங்கள் அவரை விரும்புவதை அவர் அறிந்துக் கொள்வார்.
Subscribe to:
Posts (Atom)
அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!
ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...