Search This Blog

Saturday, September 30, 2017

பொடுகுத்தொல்லை ஜாஸ்தியாகிடுச்சா?… எப்படி சரி பண்ணலாம்?…






பொடுகு தொல்லை பலருக்கு பெரிய பிரச்னையாக உள்ளது. தலையின் சருமம் வறண்டு போகவோ, எண்ணெய் அதிகமாக தலையில் தங்கியிருந்தாலோ தலைமுடி வறண்டு போவதோடு, பொடுகு வரவும் வாய்ப்புண்டு.



இது குளிர்காலங்களில் அதிகமாகிறது. இதனால் தலையில் அரிப்பும் ஏற்படலாம். பொடுகு வராமலிருக்க அல்லது பொடுகை அகற்ற சில எளிய முறைகளை உள்ளன.
ஜெல் , ஸ்ப்ரே, ஷாம்பூ ஆகியவை அதிகமாக உபயோகிப்பது. பர்மிங், கலரிங் ஆகியவற்றாலும் பொடுகு வரலாம்.
அடிக்கடி நீண்ட நேரத்திற்கு ஹேர் ட்ரையர் உபயோகிப்பது. கவலை, டென்ஷன் அதிகமானால் ஷாம்பூ போட்ட பிறகு சரியாக முடியை அலசாமல் இருப்பது போன்ற பல காரரணங்கள் உண்டு.
அதற்கு என்னதான் தீர்வு


ஆன்டி செப்டிக் தன்மை நிரம்பிய மூலிகைகளால் உருவான ஆயுர்வேத எண்ணெயை (அதில் வேப்பிலை, வெந்தயம், துளசி ஆகியவை கலந்தது) முடியின் வேரில் மென்மையாக அழுத்தித் தடவவும்.
அதே ஆன்டிசெப்டிக் எண்ணெயை முழுத் தலையிலும் சீராகத் தடவவும். வென்னீரில் டவலை ஊற வைத்து, பிறகு நீரைப் பிழிந்து விடவும். சீராக நீராவி முடிகளுக்குள் செல்லுமாறு அந்த டவலை தலையில் கட்டவும். 5 லிருந்து 10 நிமிடம் வரை அதை உலர விடவும்.
ஒரு கப் மருதாணியில் நெல்லிக்காய், சீயக்காய், ஒரு தேக்கரண்டி, வெந்தயம், வேப்பிலை, துளசி அரை தேக்கரண்டி எல்லாவற்றையும் பொடியாக கலக்கவும், எல்லாவற்றையும் தயிரில் கலந்து அல்லது பாதி எலுமிச்சை துண்டின் சாறுடன் கலந்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும்.
இதை தலை முழுக்கத் தடவி ஒரு மணி நேரம் வரை வைத்திருக்கவும். இப்பொழுது இந்த ஆயுர்வேத ஷாம்புவால் தலையை கழுவிக் கொள்ளவும். இதை வாரத்திற்கு ஒரு முறை என 3 மாதங்கள் வரை தடவவும்.


இதனால் நிச்சயமாக பொடுகு விலகும். இதற்குப் பிறகும் தலையில் பொடுகு ஏற்பட்டால் உங்கள் உடல் கோளாறுதான் இதற்குக் காரணம். எனவே உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.

தம்பதியர் இந்த விஷயங்களை பற்றி கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.



கணவன், மனைவி உறவின் முக்கிய இடம் படுக்கையறை. உடலுறவில் ஈடுபட மட்டுமல்ல, மனம் விட்டு பேசவும், ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொள்ளவும், ஊக்கமளிக்கவும் கூட சிறந்த இடம் படுக்கையறை. படுக்கையறையை தம்பதிகளின் இல்லற பந்தத்தின் கரு என்றும் கூறலாம்.




உங்கள் இருவருக்குமான நெருக்கமான படுக்கையறையில் சில விஷயங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். சில விஷயங்களை தவிர்க்காமல் செய்ய வேண்டும். கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் உறங்க வேண்டியது மிகவும் அவசியம். இது, உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நெருக்கத்தையும், இல்லற பந்தத்தின் இணைப்பையும் அதிகரிக்கும்.
எலக்ட்ரானிக் பொருட்களை உங்கள் படுக்கை அறைக்குள் எடுத்து செல்ல வேண்டாம். இது உங்கள் ஆழ்ந்த தூக்கத்தை மட்டுமின்றி இல்லறத்தையும் கெடுக்கும் தன்மை கொண்டதாகும். முக்கியமாக இது மூன்றாம் நிலை ஆழ்ந்த உறக்கத்தை சீர்கெடுக்கிறது. இதனால், உங்களுக்கு உடல் அசதி ஏற்படும்.
படுக்கை அறைக்கு சென்றதும் கொஞ்ச நேரம் இருவரும் படுக்கையில் அமர்ந்து அல்லது படுத்துக் கொண்டே கூட பேசுங்கள். இது கணவன் மனைவி மத்தியிலான நெருக்கத்தை அதிகரிக்க உதவும். தயவு செய்து இந்நேரத்தில் சண்டை சச்சரவு பற்றி பேசிவிட வேண்டாம்.
ஆண், பெண் இருவரும் படுக்கை அறையில் எதிர்பார்க்கும் விஷயம் கொஞ்சுதல். ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு கணவன், மனைவி படுக்கை அறையில் மட்டுமே கொஞ்சிக்கொள்ள முடியும். எனவே, ஆசை தீர உங்கள் மனைவியை / கணவனை அவ்வப்போது கொஞ்சுங்கள். மேலும், நீங்களும் கொஞ்சும்படியாக நடந்துக் கொள்ள வேண்டும்.


தினமும் இரவு உறங்கும் முன்னர் முத்தம் கொடுத்து குட் நைட் கூறி உறங்க செல்லுங்கள். கண்டிப்பாக அடுத்த நாள் காலை எந்த சண்டையும் வராது. நாளும் நிம்மதியாக செல்லும். தீண்டாமை ஒரு பாவ செயல். படுக்கையறையில் இது கொடுமை என்றே கூறலாம்.
ஆம், உங்கள் தாம்பத்திய வாழ்க்கை சிறக்க வேண்டும் எனில், தீண்டுதலும், கொஞ்சி விளையாடுதலும் இருக்க தான் வேண்டும். இதை நிறுத்தினாலும் கூட இல்லற மகிழ்ச்சியின் ஓர் பகுதியில் இழப்பு ஏற்படும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

எப்போதெல்லாம் உடலுறவு கொள்வது நல்லதுன்னு உங்களுக்கு தெரியுமா?… தெரிஞ்சிக்கோங்க…





உடலுறவில் ஈடுபடும் போது ஆண்கள் எளிதாக உச்சமடைந்து விடுவார்கள். ஆனால், பெண்கள் உச்சமடைவதற்கு தான் கொஞ்சம் தாமதம் ஆகும். இது மனித வாழ்வியலில் இயற்கையான ஒன்று தான். இதற்கு ஒரே தீர்வு ஆண்களிடம் தான் இருக்கிறது.
எப்போதெல்லாம் உடலுறவு கொள்வது நல்லதுன்னு உங்களுக்கு தெரியுமா?
பெண்களின் அந்தரங்க பகுதிகளில் விளையாடுதல் அவர்களை உடலுறவில் உச்சமடைய வைக்க உதவும். ஆனால், ஆனால் இயற்கையாகவே பெண்களும் உச்சமடைய சில வழிமுறைகளும் உள்ளன.
அமெரிக்காவில் இருக்கும் மெச்சிகன் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், நன்கு ஓய்வெடுக்கும் இல்லத்தரசிகள் உடலுறவில் நல்ல உச்சமடைகின்றனர் என்று கூறப்பட்டிருக்கிறது.
பெண்களுக்கிடையே நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், யாரெல்லாம் நன்கு உறங்குகிறார்களோ, அவர்கள் எல்லாம் மறுநாள் உறவில் ஈடுபடும் போது நல்ல உச்சம் காண்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


பொதுவாக பெண்கள் தூங்குவதைவிட ஒரு மணி நேரம் அதிகமாக தூங்குவதனால், 14% வரை அவர்கள் மறுநாள் உடலுறவில் ஈடுபடும்போது உச்சம் காண்கிறார்களாம்
பெரும்பாலும் பெண்கள் உடலுறவில் இயற்கையாக உச்சம் காண மாட்டார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், நல்ல ஆழமான, அமைதியான உறக்கம் இயற்கையாகவே பெண்கள் உச்சமடைய உதவுகிறதாம்.
ஆண்களுக்கு நல்ல இரத்த ஓட்டம் இருந்தால் விறைப்புத்தன்மை அதிகரிப்பது போல, பெண்களுக்கு நல்ல ஓய்வும், உறக்கமும் இயற்கையாக உச்சமடைய உதவுகிறது என்று கூறுகிறார்கள்.
இதே ஆராய்ச்சியில், நல்ல ஓய்வும், உறக்கமும் இல்லாத ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

உங்கள் நாளை சுறுசுறுப்பாக துவக்க சிறந்தது காபியா? செக்ஸா?





நமது உலகில் எல்லாம் அறிந்த அறிவாளியும் யாரும் இல்லை. எதுவுமே தெரியாத முட்டாள்களும் யாரும் இல்லை. இதை தான் நமது முன்னோர்கள் கற்றது கையளவு, கல்லாதது கடலளவு என கூறி சென்றுள்ளனர். நாம் இன்று, இந்த தொகுப்பில் காணவிருக்கும் சில உண்மைகள் உங்களை வியப்பில் ஆழ்த்தலாம். இதில் சில விஷயங்கள் பற்றி நாம் நமது வாழ்நாளில் யோசித்திருக்க கூட மாட்டோம்.


காபி? செக்ஸ்? காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது அந்த நாளை சுறுசுறுப்புடன் துவக்க உதவும் என பலர் கருதுகிறார்கள். ஆனால், காலையில் காபி குடித்துவிட்டு நாளை துவக்குவதை காட்டிலும், காலையில் செக்ஸ் வைத்து விட்டு நாளை துவக்குவது அதிக சுறுசுறுப்புடன் துவக்க உதவும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இரவு உடை! ஜப்பான், ஜெர்மன் மக்களோடு ஒப்பிடுகையில் அமெரிக்க மக்கள் இரவு உடை குறைவாக தான் உடுத்துகிறார்கள். பிரிட்டிஷ் மக்களில் பெரும்பாலானோர் இரவு நிர்வாணமாக உறங்குவதை விரும்புகிறார்கள். பல ஆய்வுகளின் முடிவுகளில் நிர்வாணமாக உறங்குவது பல வகைகளில் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆரஞ்சு! ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் தான் ஆரஞ்சு பழம் என அழைக்கப்படுவதாக சிலர் கருதுகிறார்கள். ஆனால், ஆரஞ்சு பழத்திற்கு பெயர் வந்த பிறகு தான் “ஆரஞ்சு” என்ற நிறமே வகுத்தனர். அதன் முன்னர் சிவப்பு, மஞ்சள் நிறத்தின் கலவையாக இது “Geolured” என்று தான் அறியப்பட்டு வந்தது.
இலவச உணவு! பில் கேட்ஸிடம் மெக் டொனால்ட்-ஸின் வாழ்நாள் முழுக்க இலவசமாக உண்ண கோல்ட் கார்டு ஒன்று இருக்கிறது. இதன் மூலமாக அவர் பணம் செலுத்தாமல் இலவசமாக எவ்வளவு உணவு வேண்டுமானாலும் உண்ணலாம்
விதைகள்! ஆண்களின் விதைகள் கால்களுக்கு நடுவே வெளிப்புறமாக அமைந்திருப்பதற்கும் காரணம் இருக்கிறது. விதைகள் சூடானால் விந்தணு இறக்க ஆரம்பித்துவிடும். இதற்காக தான் சூடான பகுதிகளில் வேலை செய்ய வேண்டாம், இறுக்கமாக உள்ளாடை அணிய வேண்டாம் என கூறுகிறார்கள்.


ருசி! பேஸ்ட் பயன்படுத்தி பிரஷ் செய்த பிறகு ஜூஸ் குடித்தால் ருசி மாறுபடும். இதற்கு காரணம், டூத்பேஸ்ட்டில் இருக்கும் சோடியம் சல்பேட் தான். இது இனிப்பு சுவை ஏற்பிகளை தற்காலிகமாக குறைத்துவிடும்.
தில்லாலங்கடி பெண்கள்! ஆண்கள் தங்கள் மீது ஈர்ப்பு கொள்கிறார்களா? என்பதை அறிய, பெண்களும் குட்டி, குட்டி ஃப்ளர்டிங் செய்வார்கள் ஆனால், பிறகு அதை மறுத்துவிடுவார்கள் அல்லது ஜோக் என கூறி நழுவிடுவார்கள்.
உயர்ந்த மலை! மார்சில் இருக்கும் ஒரு மலை தான், நமது சூரிய குடும்பத்தின் பெரிய மலையாக கருதப்படுகிறது. இதன் உயரம் ஏறத்தாழ 22 கிலோமீட்டர் ஆகும்.

பாலியல் பொம்மையை துன்புறுத்திய ஆண்கள்… அவுஸ்திரியாவில் நடந்த அதிர்ச்சி!!!!




கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பாலியல் பொம்மையை பார்வையாளர்கள் அளவுக்கதிகமாக ‘துன்புறுத்தியதால்’ பொம்மை பழுதான சம்பவம் தொழில்நுட்பக் கண்காட்சியொன்றில் இடம்பெற்றுள்ளது
மூவாயிரம் ஸ்டேர்லிங் பவுண்கள் பெறுமதியான ‘சமந்தா’ என்ற இந்த பொம்மை, பாலியல் செயற்பாடுகளுக்காகத் தயாரிக்கப்பட்டது. இந்த பொம்மையின் உடல் அவயவங்களைத் தொட்டால், தொடும் இடத்துக்கேற்ப குரல்வழி பிரதிபலிப்பை ஏற்படுத்தும். இந்த பொம்மை அவுஸ்திரியாவில் நடைபெற்றுவரும் கலை இலத்திரனியல் திருவிழாவில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது, சமந்தாவைக் கண்டு ஆச்சரியப்பட்ட பார்வையாளர்கள் – குறிப்பாக ஆண்கள் – பொம்மையின் உடல் பாகங்களைத் தொட்டும், தடவியும், அழுத்தியும் சேட்டை விட்டதால் சமந்தாவுக்கு சேதாரமானதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது திருத்த வேலைகளுக்காக எடுத்துச் சென்றிருக்கும் பொம்மையைத் திரும்பவும் கண்காட்சிகளில் வைக்கும் எண்ணமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் பொதுவாக காலையில் எழுந்திருக்கும் போதுதான் அதிக உணர்ச்சிப் பெருக்கில் இருப்பார்கள். அதிலும் அழகிய காதலி அவருடைய அருகில் இருந்தா...